தசைநார் சிதைவு நோயில் வாடும் சிறுமி: ரூ.16 கோடி ஊசி வாங்க உதவுமா அரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவு நோயில் வாடும் சிறுமி: ரூ.16 கோடி ஊசி வாங்க உதவுமா அரசு?

Added : ஜூன் 17, 2021
Share
நாமக்கல்: குமாரபாளையத்தில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க வழியின்றி, பெற்றோர் தவித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார், 28 - பிரியதர்ஷினி, 22. ஜவுளி வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மகள் மித்ரா, 2.இந்த சிறுமிக்கு முதுகு தண்டுவட தசை நார்
Expensive Medicine, Zolgensma, drug

நாமக்கல்: குமாரபாளையத்தில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க வழியின்றி, பெற்றோர் தவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார், 28 - பிரியதர்ஷினி, 22. ஜவுளி வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மகள் மித்ரா, 2.இந்த சிறுமிக்கு முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் ஏற்பட்டுள்ளது. தானாக குனிவது, படியில் ஏறுவது, அதிக நேரம் நிற்பது உள்ளிட்ட செயல்களை, தானாக செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

இதற்காக, பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும், இதுவரை பலனில்லை. சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, 'ZOLGENSMA' என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணம் பெற முடியும். 'இது சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே கிடைக்கும்; மருந்தின் விலை, 16 கோடி ரூபாய்' என, கூறியுள்ளனர்.

சதீஷ்குமார் கூறியதாவது:மித்ராவுக்கு தசை வளர்ச்சியடையாத வகையில், புரோட்டீன் சத்து இல்லாத நிலை உள்ளது. இதற்கான ஊசி மருந்து விலை, 16 கோடி ரூபாய். இதேபோல் நோய் தாக்கிய ஐதராபாத் சிறுவன் ஒருவனுக்கு, அவரது தந்தை அரசு மற்றும் இதர நபர்கள் வாயிலாக நன்கொடை திரட்டி, அந்த ஊசியை வாங்கி, உயிரை காப்பற்றியுள்ளார்.இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது.

முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் உதவி கேட்டுள்ளோம். பொதுமக்களிடமும் உதவி கேட்டுள்ளோம். 1 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.மருந்தின் விலை, 16 கோடி ரூபாய். அதை இறக்குமதி செய்யும் வரி, 6 கோடி ரூபாய், ஆக, 22 கோடி ரூபாய் தேவையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.உதவிகள் வழங்க, 95006 23402, 75986 06767 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X