சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி தொழிலாளி பலி

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சி நகர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன்,37. கடந்த சில மாதங்களுக்கு முன், கீழே விழுந்ததில் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு, மெதுவாக நடந்து செல்லும் நிலையில் உள்ளார்.நேற்று காலை, 6-:00 மணிக்கு வீடு அருகே நின்ற பாலகிருஷ்ணனை யானை தாக்கியது. அருகில்

பந்தலுார்:பந்தலுார் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சி நகர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன்,37. கடந்த சில மாதங்களுக்கு முன், கீழே விழுந்ததில் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு, மெதுவாக நடந்து செல்லும் நிலையில் உள்ளார்.நேற்று காலை, 6-:00 மணிக்கு வீடு அருகே நின்ற பாலகிருஷ்ணனை யானை தாக்கியது. அருகில் இருந்தவர்கள் சப்தம் எழுப்பி யானையை விரட்டி, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு பாலகிருஷ்ணனை கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர் வசித்த, குறிஞ்சிநகர், கொரோனா தனிமைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர் உடல் நேரடியாக மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X