கராலில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கராலில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை

Added : ஜூன் 17, 2021
Share
கூடலுார்:கூடலுாரில் பிடிக்கப்பட்ட காட்டு யானை, முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, கராலில் அடைக்கப்பட்டு, சிகிச்சை துவங்கியது.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதியில், காயத்துடன் ஆண் காட்டு யானை சிரமப்பட்டு வந்தது. ஈப்பன்காடு அருகே, நேற்று முன்தினம் முகாமிட்ட, யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.நேற்று, காலை, 7:30 மணிக்கு, முதுமலை கும்கி யானைகள்
 கராலில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை

கூடலுார்:கூடலுாரில் பிடிக்கப்பட்ட காட்டு யானை, முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, கராலில் அடைக்கப்பட்டு, சிகிச்சை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதியில், காயத்துடன் ஆண் காட்டு யானை சிரமப்பட்டு வந்தது. ஈப்பன்காடு அருகே, நேற்று முன்தினம் முகாமிட்ட, யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.நேற்று, காலை, 7:30 மணிக்கு, முதுமலை கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானையை, 150 மீட்டர் துாரம் அழைத்து வந்து, லாரியில் ஏற்றினர்.

முதுமலை அபயாரண்யம் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று, ஒன்பது கும்கி யானைகள் உதவியுடன் பிற்பகல், 2:45 மணிக்கு கராலில் அடைத்தனர். அதன் உடல்நிலையை, வனத்துறை கால்நடை டாக்டர்கள்; நாமக்கல் கால்நடை மருத்துவ பல்கலைபேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

கோவை வன கால்நடை அலுவலர் சுகுமாரன் கூறுகையில்,''யானை நல்ல உடல் நிலையில் உள்ளது. காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய்வக பரிசோதனைக்காக, மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. முடிவின் அடிப்படையில், அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் உடலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாவதற்கு ஓராண்டு ஆகும்,'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X