பொது செய்தி

இந்தியா

உலகிலேயே விலை குறைந்த தடுப்பூசி விரைவில் வருகிறது

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :''உள்நாட்டு தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், உலகிலேயே மிகவும் விலை குறைந்த, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, மத்திய அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு பணிக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.பரிசோதனைமஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கும் 'கோவிஷீல்டு' மற்றும்
Corona Vaccine, Low Price, Covid Vaccine, Vaccine

புதுடில்லி :''உள்நாட்டு தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், உலகிலேயே மிகவும் விலை குறைந்த, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, மத்திய அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு பணிக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.


பரிசோதனை


மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கும் 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.இந்நிலையில் மேலும் சில தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. இது குறித்து மத்திய அரசின் கொரோனா பணிக் குழுவின் தலைவரான டாக்டர், என்.கே. அரோரா கூறியுள்ளதாவது:அமெரிக்காவைச் சேர்ந்த, 'நோவாவாக்ஸ்' நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரிக்க, சீரம் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்தியாவில், ஆண்டுக்கு 100 கோடி 'டோஸ்' தடுப்பூசியை தயாரிக்க இந்த நிறுவனம் தயாராக உள்ளது.


எதிர்பார்ப்பு


இந்நிலையில், ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பயோலாஜிகல் இ' நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. வரும் அக்.,ல் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே இந்த தடுப்பூசி தயாராகிறது. நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போல, பயோலாஜிகல் இ நிறுவனத்தின் தடுப்பூசியின் செயல்திறனும், 90 சதவீதம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரண்டு, 'டோஸ்' தடுப்பூசியின் விலை, 250 ரூபாயாக இருக்கும். உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொரோனா தடுப்பூசியாக இது இருக்கும்.இவற்றைத் தவிர மேலும் சில தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அடுத்த சில மாதங்களில், சுயதேவையுடன் உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை நம் நாட்டில் தயாரிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
18-ஜூன்-202119:09:55 IST Report Abuse
S Bala இதுவும் மோடி ஊசி. எனவே காங்கிரஸ் மற்றும் அவர்களின் தோழர்கள் போட்டுக்கொள்ள மாட்டார்கள். எனவே நல்லவர்களுக்கு சீக்கிரம் கிடைக்கும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூன்-202118:54:48 IST Report Abuse
Pugazh V ஆமா...ரூ.900+900 கொடுத்து ரெண்டு டோஸும் போட்டு கொண்டாகிவிட்டது. இனி எந்த கம்பெனி எந்த மருந்து கொடுத்து என்ன??
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18-ஜூன்-202110:17:23 IST Report Abuse
Mirthika Sathiamoorthi ஏகப்பட்ட தடுப்பூசி...இதில் எதை நான் போட்டுக்கொள்வது? எது தடுப்பூசி மையத்தில் கிடைக்குதோ அதுவா? இல்லை இன்கி பிங்கி போட்டு நானே தேர்ந்தெடுத்துக்கொள்வதா? என்னங்கடா இது தடுப்பூசிக்கு வந்த சோதனை...நாமெல்லாம் மனுஷங்கதானா? இல்லை சோதனை கூட எலிகளா? அரசு விளம்பரப்படுத்த வேண்டியது வீரியமிக்க மருந்துகளோ பாதுகாப்பான மருந்துகளோ அல்ல விலைகுறைந்த மருந்துக்கள்...அதுதான் எல்லோருக்கும் இலவசம்ன்னு சொன்னதுக்கப்புறம் எதுக்கு விலை? ஒன்னும் புரிய மாட்டேங்குது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X