நடிகர் முதல் போலீஸ் அதிகாரி வரை பாலியல் தொல்லை : அம்பலப்படுத்திய நடிகை

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
திருவனந்தபுரம் : நடிகர்கள், இயக்குனர்கள், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் என தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 14 பேர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் என பன்முக திறமையாளர் ரேவதி சம்பத். 2019ம் ஆண்டு பட்னாகர் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும்

திருவனந்தபுரம் : நடிகர்கள், இயக்குனர்கள், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் என தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 14 பேர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.latest tamil news


நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் என பன்முக திறமையாளர் ரேவதி சம்பத். 2019ம் ஆண்டு பட்னாகர் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் செய்தார். இந்நிலையில் தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்களின் பட்டியலை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛இவர்கள் அனைவரும் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள் என குறிப்பிட்டு 14 பேரின் பெயரை வெளியிட்டுள்ளார். இவர் பட்டியலிட்டுள்ள நபர்களில் தனது திரைதுறையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமல்லாது டாக்டர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரும் உள்ளனர்.


latest tamil newsஅவர்களின் விபரம் : ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்), சித்திக் (நடிகர்), ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்), சிஜூ (நடிகர்), அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்), அஜய் பிரபாகர் (டாக்டர்), எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்), சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர்), நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்), மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்), ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்), ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்), சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா), பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)” என்று பட்டியலிட்டுள்ளார்.
விளம்பர நோக்கத்திற்காகவா அல்லது நிஜமாகவே பாதித்துள்ளாரா என்பதை விசாரித்தால் மட்டுமே அறிய முடியும். அதேசமயம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே புகார் அளியுங்கள் என பலரும் அவரை அறிவுறுத்தி வருகின்றனர்.
ரேவதி சம்பத்தின் இப்பதிவு மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202120:22:09 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அடுத்தது அவர்தான்.. இந்த முறை பதவி விளையாகவேண்டுமே
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
18-ஜூன்-202114:30:35 IST Report Abuse
Rengaraj ஆதிக்க எண்ணம் மேலோங்கி இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு பெண்களின் மீதான ஒரு தப்பான கண்ணோட்டமே முதல் காரணம். தனி மனிதருக்கு இழைக்கப்படும் தீங்கு என்ற கண்ணோட்டத்தில் இந்த செயல்களை குற்றமாக கருதி தண்டனை தர வேண்டும். ஒருவர் புரியும் தொழிலை வைத்து அந்த நபரை எடைபோடும் மனப்பாங்கு மாற வேண்டும். இனி வரும் காலங்களிலாவது ஆரோக்கியமான சிந்தனைகளை இளைய சமுதாயத்திடம் விதைக்க வேண்டும். அதற்கு செய்தி மற்றும் காட்சி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இந்த இளைய சமுதாயத்துக்கு பெரும்பங்காற்றிட வேண்டும்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-ஜூன்-202113:08:11 IST Report Abuse
S.P. Barucha நடிகைகளுக்கென்றே ஒரு தனி காவல் துறை அமைக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X