பொது செய்தி

தமிழ்நாடு

நிதி தட்டுப்பாட்டால் பாம்பு பண்ணை மூடல்?

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:வருவாய் மற்றும் பராமரிப்பு நிதி இல்லாததால், சென்னை பாம்பு பண்ணை நிரந்தரமாக மூடப்படும் நிலையில் உள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.சென்னையில், 1972ல், பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேகர் தலைமையில், பாம்பு பண்ணை டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் நிர்வாகத்தில், கிண்டி பாம்பு பண்ணை இயங்கியது. இந்தியாவில் பாம்புகளுக்காக தனியாக துவங்கப்பட்ட முதல் பண்ணை இது தான்.

சென்னை:வருவாய் மற்றும் பராமரிப்பு நிதி இல்லாததால், சென்னை பாம்பு பண்ணை நிரந்தரமாக மூடப்படும் நிலையில் உள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னையில், 1972ல், பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேகர் தலைமையில், பாம்பு பண்ணை டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் நிர்வாகத்தில், கிண்டி பாம்பு பண்ணை இயங்கியது. இந்தியாவில் பாம்புகளுக்காக தனியாக துவங்கப்பட்ட முதல் பண்ணை இது தான். அதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கல்வி நிறுவன மாணவர்கள், இங்கு ஆர்வமாக வந்து செல்வர்.

இந்நிலையில், சென்னை பாம்பு பண்ணை டிரஸ்ட் செயல் தலைவர் பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் வாயிலாக கிடைக்கும் நிதியில் தான், இந்த பூங்கா செயல்பட்டு வந்தது. ஊரடங்கால் ஓராண்டில், 80 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 6 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி இருப்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஆள் குறைப்பு, சம்பள குறைப்பு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நிதி நிலைமையை சீரமைப்பதற்கான வரைவு அறிக்கை, வனத்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசு தலையிட்டு உதவி செய்தால், பாம்பு பண்ணையை தொடர்ந்து பராமரிக்க முடியும். வனவிலங்கு சட்டப்படி, தனியாரால் பராமரிக்க முடியாத நிலையில், வன உயிரினங்களை அரசே ஏற்க வேண்டி வரும்.கொரோனா தொற்று காலத்தில், பாம்புகளை பராமரிக்க, அரசு சிறிய அளவிலாவது நிதி ஒதுக்கி, இப்பண்ணையை நிரந்தரமாக மூடுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீர்வுக்கு என்ன வழி?

*பாம்பு விஷம் சேகரிப்பு தொழிற்சாலை அமைக்கலாம். அதை மருத்துவ உபயோகத்திற்கு விற்பதன் வாயிலாக வருவாய் கிடைக்கும்

* பாம்பு பண்ணை டிரஸ்டுக்கு, 50 கோடி ரூபாய் மதிப்பில், 2.5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை வனத்துறை பெற்றுக் கொண்டு, பாம்பு பண்ணைக்கு, கிண்டியில், 1 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. தற்போது நிதிச்சுமை உள்ளதால், மீதமுள்ள, 1.5 ஏக்கரில், 1 ஏக்கரை டிரஸ்டுக்கு வழங்கினால், அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய், பண்ணை நடத்த உதவியாக இருக்கும் என, டிரஸ்ட் நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X