பொது செய்தி

தமிழ்நாடு

ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: பிரமிக்கவைக்கும் தீவு கிராமம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி:கொரோனாவின் இரு அலைகளிலும், ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு இல்லாமல் கானல் நீராக்கினர் இருக்கம் தீவு மக்கள். இது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவில், இருக்கம் மற்றும் வடகோடி என்ற இரு பகுதிகள்
 ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: பிரமிக்கவைக்கும் தீவு கிராமம்

கும்மிடிப்பூண்டி:கொரோனாவின் இரு அலைகளிலும், ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு இல்லாமல் கானல் நீராக்கினர் இருக்கம் தீவு மக்கள். இது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவில், இருக்கம் மற்றும் வடகோடி என்ற இரு பகுதிகள் உள்ளன.


தாய்மொழி தமிழ்



பரந்து விரிந்துள்ள பழவேற்காடு ஏரியின் மத்தியில் அமைந்துள்ள, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட அந்த தீவுப்பகுதி 11,659 ஏக்கர் நிலப்பரப்பு உடையது. தீவில், 700 குடும்பங்களைச் சேர்ந்த 2,500 பேர் வசித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட தீவாக இருந்தாலும், அவர்களின் தாய்மொழி தமிழ் தான். வடகோடி பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழிலையும், இருக்கம் பகுதி மக்கள் விவசாயத்தையும் நம்பி உள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு இரண்டு மணி நேர படகு சவாரி வாயிலாக, தமிழக பகுதியான ஆரம்பாக்கம் மற்றும் சுண்ணாம்புகுளம் சென்று வருவது அவர்களின் வழக்கம்.கொரோனா தொற்றின் இரு அலைகளிலும் இருக்கம் தீவு மக்கள், ஒருவர் கூட பாதிக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


பாதிக்கவில்லை



இருக்கம் தீவு மணல் பாங்கான பகுதி என்பதால், பைக், கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்கள் எதுவும் கிடையாது. அதனால், அங்குள்ளவர்கள், தீவுக்குள் எங்கு சென்று வருவதாக இருந்தாலும் நடந்தே செல்கின்றனர்.பெரும்பாலும் கடல் உணவையே எடுத்து கொள்கின்றனர். நல்ல உடல் ஆரோக்கியம், சத்தான உணவு பழக்கம், உப்பு காற்றை சுவாசிப்பது உள்ளிட்ட காரணங்களால், கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்கின்றனர், தீவு வாசிகள்.அவற்றை கடந்து, கொரோனா பேரிடர் காலங்களில், அந்த தீவு தீவாகவே இருந்ததால் தான் கொரோனா தொற்று அவர்களை நெருங்க முடியாமல் போனது என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனா பரவலின் போது, வெளியாட்கள் ஒருவரும் தீவிற்கு வரவில்லை. தீவில் வசிக்கும் மக்களும் வெளியே செல்லவில்லை. இந்த கட்டுப்பாடு தான், அவர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியுள்ளது.


கானல் நீர்

அந்த தீவை சேர்ந்த சிலர்,ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம் பகுதிகளில் வசித்து வருகின்றனர். கொரோனா பரவலின் போது, தீவு மக்களுக்கு தேவையான பொருட்களை, அவர்கள் வாங்கி, படகு மூலம் அனுப்பி வைத்ததால், அத்தியாவசிய தேவைக்கும் தீவு மக்கள் வெளியே வரவில்லை. தீவு மக்களின் பொறுப்பான கட்டுப்பாட்டால், இரு அலை அல்ல, எத்தனை தொற்று அலை வந்தாலும், அவர்களை பொறுத்தமட்டில் அது கானல் நீர் தான்.

இருக்கம் மற்றும் வடகோடி பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே, தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய, இதுவரை 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு இல்லை

-கட்ரோத் ரேவதி,

அரசு மருத்துவ பணியாளர், இருக்கம் தீவு.

கொரோனா பரவலின் போது, பழவேற்காடு ஏரி அல்லது கடல், அதைவிட்டால் தீவில் உள்ள வீடு என இருந்தோமே தவிர, வெளியே எங்கும் செல்லவில்லை, வெளியாட்களுடனும் தொடர்பில் இல்லை.

-எம்.அருண், 28

வடகோடி குப்பம், இருக்கம் தீவு

பெரும்பாலும் சத்தான கடல் உணவையே சமைத்து உண்கிறோம். எங்களின் உணவு பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் பாதிக்காமல் காக்கிறது.

-கே.கற்பகம், 45

இருக்கம் தீவு

இருக்கம் தீவை சேர்ந்த நான், ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன். கொரோனா பரவலின் போது, தீவு மக்களின் அத்தியாவசிய தேவை கேட்டறிந்து, அதை ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கி, படகு மூலம் அனுப்பி வைத்தவர்களின் நானும் ஒருவன்.

- எம்.ராஜேஷ், 28

கவுன்சிலர், இருக்கம் தீவு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X