பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் சேவைக்கு விருது

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிவோர் மற்றும் நிறுவனங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர்; சிறந்த தொண்டு நிறுவனம்; சிறந்த மருத்துவர்; சிறந்த சமூகப் பணியாளர். சிறந்த

சென்னை:மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிவோர் மற்றும் நிறுவனங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர்; சிறந்த தொண்டு நிறுவனம்; சிறந்த மருத்துவர்; சிறந்த சமூகப் பணியாளர். சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு விருது வழங்கப்படும்.விருதாக, தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

தொண்டு நிறுவனத்துக்கு, கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய்; மாவட்ட கலெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.விருதுக்கான விண்ணப்பப் படிவங்கள், சென்னை, காமராஜர் சாலையில், லேடி வெலிங்டன் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன், வரும் 30ம் தேதி மாலை, 5:45க்குள் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், awards.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படுவர். விருதாளர்களுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருது வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X