அரசியல் செய்தி

தமிழ்நாடு

தப்புக்கணக்கு போட வேண்டாம்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: 'அ.தி.மு.க.,வினரை அச்சுறுத்துவதால், அ.தி.மு.க., அடங்கிப் போகும் என, தப்புக்கணக்கு போடாமல், நல்லாட்சி நடத்துவதில் கருத்தை செலுத்துவதில் தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்து 'உள்ளனர்.தயார்அவர்களது அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, அதன் இயற்கை குணாதிசயங்கள்,
DMK, ADMK, OPS, EPS, AIADMK, தப்புக்கணக்கு , திமுக, அதிமுக, எச்சரிக்கை

சென்னை: 'அ.தி.மு.க.,வினரை அச்சுறுத்துவதால், அ.தி.மு.க., அடங்கிப் போகும் என, தப்புக்கணக்கு போடாமல், நல்லாட்சி நடத்துவதில் கருத்தை செலுத்துவதில் தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்து 'உள்ளனர்.


தயார்


அவர்களது அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, அதன் இயற்கை குணாதிசயங்கள், தமிழக மக்களை வாட்டி வதைக்க துவங்கி விட்டன. ௧௦ ஆண்டு காலம் தலைகாட்டாத மின் வெட்டு, தற்போது மாநிலம் முழுதும் தலை விரித்தாடுகிறது.பட்டப்பகலில் சட்ட விரோத செயல்களில், எவ்வித கூச்சமோ, அச்சமோ இல்லாமல், தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில், சுதந்திரமாக பணி செய்ய முடியாத அளவுக்கு, ஆளும் கட்சியினர் தலையீடும், உருட்டல், மிரட்டல்களும் அரங்கேறி வருகின்றன. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில், ஓட்டளித்த மக்களை வஞ்சிப்பதில், முதலிடம் பெற்ற ஆட்சியாக உள்ளது. ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக் கூடிய, கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில், தி.மு.க.,வினர் தங்கள் முழு வரம்புமீறலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.ஆளும் கட்சியினரின் தவறுகளை வெளிச்சத்திற்கு எடுத்து வரும், அ.தி.மு.க.,வின், தகவல் தொழில்நுட்ப அணியான, ஐ.டி., பிரிவினர் மீது, வன்முறை தாக்குதல்களை ஏவி விடுவதில், தி.மு.க.,வினர் தீவிரமாக உள்ளனர்.

இதை கண்டிக்கிறோம்.ஆற்ற வேண்டிய பணிகள், ஆயிரம் இருக்கையில், அராஜகத்துக்கு துணை போகும் செயலில், ஆளும் கட்சியினர் தொடர்ந்து ஈடுபடுவது, மக்களுக்கு செய்யும் துரோகம்.பழிவாங்கும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வினர் மீதும், ஐ.டி., பிரிவினர் மீதும், பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடத்துவதுமான செயல்களை, தி.மு.க., தலைமை தடுத்து நிறுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிர்த்துக் களமாட, கட்சி யின் வழக்கறிஞர் பிரிவு தயாராக உள்ளது.இப்பிரிவு, எதிர்க்கட்சி என்ற பிரதானமான வாய்ப்பை பயன்படுத்தி, தி.மு.க.,வுக்கும், அதன் தலைமையிலான, அரசுக்கும் சட்ட நெருக்கடி தர தயாராக இருக்கிறது.


'நினைவில் கொள்'


அ.தி.மு.க., புது வெள்ளத்தில் மிதந்து வரும் நுரை பூ அல்ல, ஊதி விளையாட. தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும், எங்கள் கட்சியை நெருங்க முடியாது.அச்சுறுத்துவதால், கட்சி அடங்கிப் போகும் என்று தப்புக்கணக்கு போடாமல், தலை, கால் தெரியாமல், ஆட்டம் போடாமல், நல்லாட்சி நடத்துவதில், கருத்தை செலுத்துவது, ஓட்டளித்த மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, தி.மு.க.,வுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
18-ஜூன்-202121:01:46 IST Report Abuse
Nesan அய்யா சாமிகளா உங்கள் இருவருக்கும் என்ன நேர்மையான தகுதிகள் இருக்கிறது???, அ.தி.மு.க வை வழி நடத்துவதற்கு. . கடந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள். உங்களை மத்தியில் உள்ளவர்கள் ஆட்சி செய்தார்கள், ஆட்டிப்படைத்தார்கள். இருவரது சுய நலத்துக்காக கட்சியையும், காட்சியையும் நடத்துகிறீர்கள். உங்கள் இருவருக்குள்ளும் ஒரே பதவி சண்டைகள், சாட்சரவுகள். கூடிய விரைவில் ஆளுமை படைத்த ஒருவருக்குள்ளு ஒளிந்துகொள்ள போவது நிட்சம். பாவம் உங்களை நம்பிய கட்சிக்காரர்கள். மக்கள் செல்வாக்குக்கு இல்லாத இரட்டை தலைமை, இனியும் எடுபடாது.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
18-ஜூன்-202120:15:36 IST Report Abuse
Nagercoil Suresh ஜெயக்குமார் கூறியதுபோல் கோர பசி ஆரம்பித்துவிட்டது, இன்னும் 10 வருடங்களுக்கு எப்படி தான் தாக்கு பிடிக்கப்போகிறாங்களோ கணக்குல புலி னு சொல்லுறவங்க...
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
18-ஜூன்-202119:58:13 IST Report Abuse
Desi எங்க அந்த சிஸ்டம் சரி இல்லைனு பேட்டி கொடுத்தவாறு...ஒ அவரு தனி விமானத்துல குடும்பதோட அமெரிக்கா பயணம் போய்ட்டாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X