பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு 6.67 லட்சம் கறுப்பு பூஞ்சை மருந்து 'சப்ளை'

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு, 6.67 லட்சம் 'அம்போடெரிசின் - பி' மருந்துகள் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் வீரிய மருந்துகளின் பக்கவிளைவால், நோயில் இருந்து மீண்ட பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகளின் தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு

புதுடில்லி:கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு, 6.67 லட்சம் 'அம்போடெரிசின் - பி' மருந்துகள் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் வீரிய மருந்துகளின் பக்கவிளைவால், நோயில் இருந்து மீண்ட பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகளின் தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


அறிக்கை

இது குறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான, 6.67 லட்சம் அம்போடெரிசின் - பி மருந்துகளுடன், இதர மருந்துகளையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கான, 'லிபோசோமல் அம்போடெரிசின் - பி' மருந்துகள் தயாரிப்பை அதிகரிக்கும்படி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது சிப்லா, சன்பார்மா உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் கறுப்பு பூஞ்சை மருந்துகளை தயாரிக்கின்றன; இவை, இம்மாதம் 2.64 லட்சம் மருந்துகளை தயாரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஆறு நிறுவனங்கள்

இது தவிர இந்த வகை மருந்துகளை தயாரிக்க, ஆறு நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது.மருந்து தயாரிக்கும் உரிமம், தேவையான மூலப்பொருட்கள் சப்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பார்வை இழந்த சிறுவர்கள்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் பார்வையை இழந்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை வாயிலாக, பாதிக்கப்பட்ட கண்கள் அகற்றப்பட உள்ளன.கண்களை அகற்றாவிட்டால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இவர்கள் ஏற்கனவே கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தவர்கள் என, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X