'அமெரிக்காவுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு வேறு சட்டமா?'

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :''அமெரிக்க பார்லி.,யில் வன்முறை நடந்தபோது, 'டுவிட்டர்' சமூக வலைதளம், சர்ச்சை கருத்துகளை நீக்கியது.“ஆனால், நம் நாட்டில் செங்கோட்டையில் வன்முறை நடந்தபோது நீக்க மறுத்தது சரியா,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப
அமெரிக்கா, ஒரு சட்டம் ,  வேறு சட்டமா?'

புதுடில்லி :''அமெரிக்க பார்லி.,யில் வன்முறை நடந்தபோது, 'டுவிட்டர்' சமூக வலைதளம், சர்ச்சை கருத்துகளை நீக்கியது.“ஆனால், நம் நாட்டில் செங்கோட்டையில் வன்முறை நடந்தபோது நீக்க மறுத்தது சரியா,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள், புதிய கட்டுப்பாட்டை ஏற்றுள்ளன.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டுவிட்டர்' சமூக வலைதளம், நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளது. அந்த சமூக வலைதளத்துக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அதில் இனி பதிவிடப்படும் அனைத்து தகவல்களுக்கும், அந்த நிறுவனமே பொறுப்பாகும்.இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:'கேபிடோல் ஹில்' என அழைக்கப்படும், அமெரிக்க பார்லி., கட்டடத்துக்குள் நுழைந்து, அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை துாண்டியதாக, டிரம்ப் வெளியிட்ட பதிவுகளை, டுவிட்டர் நீக்கியது.

அதே நேரத்தில், நம் தேசியக் கொடியை, பிரதமர் ஏற்றும் செங்கோட்டையில் வன்முறை நடந்தது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வன்முறையில் சிலர் ஈடுபட்டது தொடர்பாக, டுவிட்டரில் பதிவுகள் வெளியானது. ஆனால், அதை நீக்க டுவிட்டர் மறுத்துவிட்டது.கேபிடோல் ஹில் உங்களுக்கு எப்படி பெருமை வாய்ந்ததோ, அதுபோல செங்கோட்டை எங்களுக்கு பெருமை வாய்ந்தது.லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை நீக்குவதற்காக, அந்த நிறுவனத்துடன், 15 நாட்கள் போராட வேண்டியிருந்தது.அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனங்கள், அங்குள்ள சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இந்தியாவில் செயல்படும் டுவிட்டர், இந்திய சட்டங்களை ஏற்க எப்படி மறுக்க முடியும்.மூன்று மாதங்களுக்கு மேல் அவகாசம் அளித்தும் அதை செயல்படுத்த மறுப்பது சரியல்ல.

நம் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அரசு துறைகள், அமைச்சர்கள் என, பெரும்பாலானோர், டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்துகிறோம். எந்த தளத்தையும் தடை செய்வது எங்கள் நோக்கமல்ல.நாங்கள் நேர்மையாக, வெளிப்படையாக நடக்கும்போது, டுவிட்டரும் அதற்கேற்ப நடக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என போலி பாசாங்கு காட்டுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூன்-202118:52:40 IST Report Abuse
Pugazh V @Hosur balu, சரியான கேள்வி. ஆனால் நம் ஒன்றிய அரசு ட்விட்டருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. 7 ஆண்டு களாக அரசாங்கமே ட்விட்டரில் தானே ஓடுகிறது மறுக்க இயலுமா? பிரதமர் முதல் ஆளுங்கட்சி எம்.பி.வரை, அரசின் பொருளாதார கொள்கைகள், அறிவிப்பு கள், புதிய சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் ட்வீட் தானே பண்ணுகிறார்கள். அரசுத்துறை அதிகாரிகள் ட்விட்டர் கணக்கு துவங்கச சொல்லி வற்புறுத்தப்பட்டோம். செயலாளர் ட்ரான்ஸ்ஃபர் கூட முதலில் ட்விட்டரில் வரும். மேலும், ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பாஜகவின் ஐ.டி. விங் பெரிதும் நம்பியிருப்பது ட்விட்டர் தான். இதில் ஒருவரே 64 ஐ.டி. வரை வைத்திருக்கலாம். ஒரே பதிவுக்கு ஒருவரே 128 முறை லைக் போடலாம். எனவே பாஜக ட்விட்டரரைத் தடை செய்யாது.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
18-ஜூன்-202117:38:47 IST Report Abuse
BALU ட்விட்டரை பயன்படுத்துவதை நிறுத்த பிரதமர் உட்பட எந்த அமைச்சருக்கும் முடியவில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் ட்விட்டர் நிறுவனம், நமது பிரதமரின் பதிவுகளையே நீக்கியது.அதையும் சகித்துக் கொண்டு ட்விட்டரிடம் கெஞ்சிக் கொண்டு கிடக்கிறது இந்திய அரசு. ட்விட்டரை தடைசெய்யத் திராணி இல்லாமல் போய்விட்டதா இந்திய அரசுக்கு? நம்நாட்டின் பாதுகாப்பை விட ட்விட்டரின் பயன்பாடு அவசியமா? இந்தியா எந்த நிபந்தனையும் இன்றி ட்விட்டரை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
18-ஜூன்-202116:31:35 IST Report Abuse
Sundaram Bhanumoorthy Here everyone saying twitter should be banned.but what India is doing right.allowing twitter to operate and at the same time penalize and punish them for violation.hence twitter,US and all opposition parties can not accuse indian government muzzling social media.this is the right approach.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X