பொது செய்தி

இந்தியா

'சைபர்' குற்ற புகார்களுக்கு தொலைபேசி எண் அறிமுகம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:'டிஜிட்டல்' வாயிலாக நடக்கும் பண மோசடிகளை தடுக்கும் வகையில், 155260 என்ற தேசிய உதவி மைய தொலைபேசி எண்ணை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் வாயிலான பண பரிவர்த்தனை கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதே சமயம், இத்தகைய பண பரிவர்த்தனை களில் மோசடிகளும் பெருகி வருகின்றன.இந்நிலையில்,

புதுடில்லி:'டிஜிட்டல்' வாயிலாக நடக்கும் பண மோசடிகளை தடுக்கும் வகையில், 155260 என்ற தேசிய உதவி மைய தொலைபேசி எண்ணை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் வாயிலான பண பரிவர்த்தனை கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதே சமயம், இத்தகைய பண பரிவர்த்தனை களில் மோசடிகளும் பெருகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை வழங்க உறுதி எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் படி, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க, தேசிய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையம், மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம், 'சைபர் கிரைம்' எனப்படும் வலைதள மோசடிகள் வாயிலாக அபகரிக்கப்படுவதை தடுக்க துணை புரியும். இந்த உதவி மையத்தை, 155260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உடனடியாக பண மோசடியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X