அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலைவாணர் அரங்கில் தான் பட்ஜெட் தாக்கல் : அப்பாவு அறிவிப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :''கலைவாணர் அரங்கில், கவர்னர் உரை மட்டுமின்றி, பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.கொரோனா பரவலை தொடர்ந்து, கோட்டையில் உள்ள பாரம்பரியம் வாய்ந்த சட்டசபை அரங்கில் கூட்டம் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.அதற்கு மாற்றாக, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.,
 கலைவாணர் அரங்கம், பட்ஜெட் , சபாநாயகர், அறிவிப்பு

சென்னை :''கலைவாணர் அரங்கில், கவர்னர் உரை மட்டுமின்றி, பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

கொரோனா பரவலை தொடர்ந்து, கோட்டையில் உள்ள பாரம்பரியம் வாய்ந்த சட்டசபை அரங்கில் கூட்டம் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.அதற்கு மாற்றாக, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், சமீபத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், இங்கு பதவி ஏற்றனர். வரும், 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு, இங்கு மீண்டும் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.அதில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கலைவாணர் அரங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், தற்காலிக சட்ட சபை அமைக்கும் பணிகளில், பொதுப்பணித் துறையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


பட்ஜெட் தாக்கலும் இங்கு தான்


சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர், நேற்று அங்கு வந்து பணிகளை பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினர்.பின், சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:கவர்னர் உரை மட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலும் இங்கு நடக்கவுள்ளது. சட்டசபை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட அனைவரும், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தலைமை செயலகம், எம்.எல்.ஏ.,க்கள் விடுதி போன்ற இடங்களில், கொரோனா பரிசோதனை இன்று துவங்குகிறது.கொரோனா, 'நெகட்டிவ்' சான்று மட்டுமின்றி, உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
18-ஜூன்-202119:44:31 IST Report Abuse
sankaseshan கோட்டையில் ஏன் நடத்தவில்லை வாடகை கொடுக்க பணம் மனம் இல்லையா அல்லது ஒன்றிய அரசின் ராணுவத்துக்கு சொந்தமானதாலா சுதந்திர தின கொண்டாட்டத்தை அணிவகுப்பை கலைவாணர் அரங்கில் நடத்தட்டும்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூன்-202117:39:35 IST Report Abuse
Pugazh V இதுவே, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில்.. சட்ட மன்ற கட்டிடத்தில் அடுத்த கூட்டம் மற்றும் பட்ஜெட் என்று அறிவித்திருந்தால்.... உடனே...இவர்களுக்கு கோவிட் சட்டதிட்டங்கள் கிடையாதா? கோட்டை வளாகத்தில் அத்தனை பாதுகாப்பு இல்லை.என்று எழுதுவார்கள். அண்ணைகளா...உங்கள பத்தி தெரியாதா?? எங்கே எப்படி பட்ஜெட் போட்டால் உங்களுக்கு என்ன? "மோசமான பட்ஜெட்" என்று கதறப் போகிறீர்கள். அவ்வளவு தானே?? ஓ.கே. போலாம்..ரைட்...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-202116:52:12 IST Report Abuse
ஆரூர் ரங் கலைவாணர் சிரிப்பு சக்ரவர்த்தி😆😆. அங்கு பட்ஜெட் தாக்கல்,? சிரிப்பா சிரிக்கப்போகுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X