பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஆவணம் புதுப்பிக்க செப்டம்பர் வரை அவகாசம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:வாகனம், ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க, மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம், வரும் செப்டம்பர் வரை அவகாசம் அளித்துள்ளது.உத்தரவுஇது குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகன பிரிவு இயக்குனர் பியூஸ் ஜெயின், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீஸ் இயக்குனர்கள், போக்குவரத்து துறை செயலர்கள் மற்றும் கமிஷனர்களுக்கு,

சென்னை:வாகனம், ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க, மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம், வரும் செப்டம்பர் வரை அவகாசம் அளித்துள்ளது.


உத்தரவு

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகன பிரிவு இயக்குனர் பியூஸ் ஜெயின், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீஸ் இயக்குனர்கள், போக்குவரத்து துறை செயலர்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, அனுப்பியுள்ள உத்தரவு:நாட்டில் கொரோனா பரவல், கடந்த ஆண்டு மார்ச் முதல் அதிகரித்தது.அதைத் தொடர்ந்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, மாநிலங்களின் கொரோனா பரவலுக்கு ஏற்ப, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.என்றாலும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் ஆள் பற்றாக்குறை மற்றும் நீண்ட வரிசையில் பயனாளிகள் காத்திருத்தலை தடுக்கும் வகையில், வாகனங்களுக்கான, 'பிட்னஸ் சர்டிபிகேட்' எனும் தகுதி சான்றுகள், உரிமங்கள், பதிவு செய்தல் மற்றும் ஓட்டுனர் தொடர்பான, லைசென்சுகளை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

அதாவது, கடந்தாண்டு பிப்ரவரி முதல் காலாவதியாகும் ஆவணங்களை, ஜூன் வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.அதன்பின்னும், கொரோனா பரவல் நீடித்ததால், புதுப்பிக்க ஆகஸ்ட், டிசம்பர் என, அவகாசம் வழங்கப்பட்டது.


நீட்டிப்பு

இந்தாண்டும் கொரோனா பரவல் இருப்பதால், மார்ச் வரை வழங்கப்பட்ட அவகாசம், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது.தற்போதும் நிலைமை மோசமாக உள்ளதால், கடந்தாண்டு பிப்., முதல், இந்தாண்டு ஆக., வரை காலாவதியாகும் வாகனம் தொடர்பான ஆவணங்களை, செப்டம்பர் வரை புதுப்பிக்கலாம்.அதுவரை, காலாவதியான ஆவணங்களுக்கான அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X