பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு நீர் திறப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழகத்திற்கு மாத ஒதுக்கீட்டின்படி நீர் திறக்க வேண்டும்' என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடப்பு, 2021 - 22ம்

சென்னை:'தமிழகத்திற்கு மாத ஒதுக்கீட்டின்படி நீர் திறக்க வேண்டும்' என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடப்பு, 2021 - 22ம் ஆண்டிற்கான நீர் வழங்கும் காலம், தற்போது துவங்கியுள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று நடந்தது. தமிழகத்தின் சார்பில், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்திற்கு ஜூன், 9.91 டி.எம்.சி.,யும், ஜூலையில், 31.2 டி.எம்.சி., நீரையும், கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

ஆனால், ஜூன் மாத ஒதுக்கீட்டிற்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.வரும் நாட்களில், தமிழகத்திற்கு நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தலைவரிடம், தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை; தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தால், முறைப்படி நீர் தருவதாக, கர்நாடக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன்பின் தமிழகம், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, பயன்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கூட்டம், அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், 22ம் தேதி நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X