இந்தியர்களின் சுவிஸ் வங்கி டெபாசிட் ரூ.20,706 கோடியாக உயர்வு

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி : சுவிஸ் மத்திய வங்கிகளில் இந்தியர்கள் ரூ. 20 ஆயிரத்து 706 கோடி வரை டிபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி

புதுடில்லி : சுவிஸ் மத்திய வங்கிகளில் இந்தியர்கள் ரூ. 20 ஆயிரத்து 706 கோடி வரை டிபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி நேற்று
வெளியிட்டது. அதில், இந்த வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள நிதிகள் குறித்த தகவல்களும் கிடைத்து உள்ளன.


latest tamil news



இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில், 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இந்த அறிக்கைவாயிலாக தெரிய வந்துள்ளது. இது 2019ம் ஆண்டு இறுதியில் 6,625 கோடியாக இருந்தது.இந்த, 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாயில், 4,000 கோடி ரூபாய், வாடிக்கையாளர்களின், 'டிபாசிட்' தொகை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
18-ஜூன்-202114:57:14 IST Report Abuse
R S BALA ஸ்விஸ் வங்கி இது போன்ற டெபாசிட் விவரங்களை எந்த ஒரு நாட்டுக்கும் தெரிவிப்பதில்லையாமே .. ?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூன்-202118:34:35 IST Report Abuse
தமிழவேல் அதனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளுக்கு தெரிவிக்கின்றது. ஆனால், பெற்றுக்கொண்ட சில நாடுகள் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை....
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
18-ஜூன்-202111:44:42 IST Report Abuse
GANESUN சீக்கிரம் லண்டன் போயி சில அட்ஜஸ்டமென்ட் செய்யனும்.
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
18-ஜூன்-202110:37:28 IST Report Abuse
KUMAR. S 2019 இறுதியில் 6625 கோடி கருப்பு பணம் இருந்தது. ..இப்போது 20706 கோடி...அதாவது இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில்தான் கிட்டத்தட்ட 14000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இது யாருடைய பணம்??.. இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் யார்.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X