பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப் வீடியோ'வில் நளினி, முருகன் பேசலாம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
சென்னை:ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக, வேலுார் சிறையில் நளினி, முருகன் உள்ளனர். லண்டனில் உள்ள முருகனின் சகோதரி, இலங்கையில் உள்ள தாயுடன், வாட்ஸ் ஆப் வீடியோ வாயிலாக பேச, இருவரையும் அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாய் பத்மா மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய அமர்வு விசாரித்தது. வெளிநாடுகளில் வசிக்கும்

சென்னை:ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக, வேலுார் சிறையில் நளினி, முருகன் உள்ளனர்.

லண்டனில் உள்ள முருகனின் சகோதரி, இலங்கையில் உள்ள தாயுடன், வாட்ஸ் ஆப் வீடியோ வாயிலாக பேச, இருவரையும் அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாய் பத்மா மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய அமர்வு விசாரித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச அனுமதித்தால், ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விசாரிக்கும் பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சியின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் சிறை கைதிகள் பேச அனுமதி இல்லை; இந்தியாவில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்கப்படுவதாகவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் வீடியோ வாயிலாக பேச, நளினி, முருகனுக்கு அனுமதி அளிக்கும்படி உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X