பொது செய்தி

தமிழ்நாடு

'கேபிள் ஆப்பரேட்டர்'களுக்கு அரசு எச்சரிக்கை

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
சென்னை:'அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, வருவாய் இழப்பு ஏற்படுத்தும், கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், இலவசமாக, 'செட்டாப் பாக்ஸ்' வழங்கி, 200க்கும் மேற்பட்ட சேனல்களை, 140 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., வரி என, குறைந்த மாத

சென்னை:'அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, வருவாய் இழப்பு ஏற்படுத்தும், கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், இலவசமாக, 'செட்டாப் பாக்ஸ்' வழங்கி, 200க்கும் மேற்பட்ட சேனல்களை, 140 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., வரி என, குறைந்த மாத சந்தாவில் வழங்கி வருகிறது.இது, மற்ற நிறுவனங்களை விட, மிகக் குறைந்த கட்டணமாகும். குறைந்த கட்டணத்தில், அதிகமான சேனல்களை வழங்கி வருகிறது.அரசு கேபிள் சேவையை விரும்புவோர், அந்த பகுதி யில் உள்ள அரசு கேபிள் ஆப்பரேட்டரிடம் கேட்டு பெறலாம். அவர் வழங்கவில்லை என்றால், 1800 4252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.

செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப் பட்டாலோ, சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ, செட்டாப் பாக்ஸ் மற்றும் 'ரிமோட், அடாப்டர்' ஆகியவற்றை, அந்த பகுதி யில் உள்ள அரசு கேபிள் ஆப்பரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதால், அவர்கள் அதை அரசு அலுவலகத்தில், திரும்ப ஒப்படைக்க வேண்டும்.ஒரு சில ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் சேவையை வழங்க, இந்நிறுவனத்திடம் இருந்து, செட்டாப் பாக்ஸ்களை பெற்றுஉள்ளனர்.அதை பொது மக்களுக்கு வழங்காமல், தங்கள் சுய லாபத்திற்காக, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, அரசு நிர்ணயம்செய்த தொகையை விடக் கூடுதலாக வசூல் செய்வதாக, புகார்கள் வந்தபடி உள்ளது.

இவ்வாறு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் ஆப்பரேட்டர்கள் மீதும், அரசு செட்டாப் பாக்ஸ்களை, மூன்று மாதங்களுக்கு மேலாக, செயலாக்கம் செய்யாமல், அவற்றை திரும்ப ஒப்படைக்கவும் செய்யாமல் இருக்கும், ஆப்பரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X