பொது செய்தி

தமிழ்நாடு

எங்கள் உயிரின் உயிரல்லவா, தொழிலாளர்கள்! ஒரே நாளில் 10 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசி

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
திருப்பூர்:இந்திய தொழில் கூட்டமைப்பு - தினமலர் நாளிதழ் இணைந்து, திருப்பூரில் பனியன் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. நேற்று ஒருநாளில், 10 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசி கேட்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.'தொற்று இல்லாத திருப்பூர்; தடையில்லா தொழில்
 எங்கள் உயிரின் உயிரல்லவா, தொழிலாளர்கள்! ஒரே நாளில் 10 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசி

திருப்பூர்:இந்திய தொழில் கூட்டமைப்பு - தினமலர் நாளிதழ் இணைந்து, திருப்பூரில் பனியன் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. நேற்று ஒருநாளில், 10 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசி கேட்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.'தொற்று இல்லாத திருப்பூர்; தடையில்லா தொழில் வளர்ச்சி' என்கிற லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு - தினமலர் நாளிதழ் இணைந்து, பின்னலாடை தொழிலாளருக்கான இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்திவருகின்றன.முதல்கட்டமாக, 11 ஆயிரம் 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர், நிறுவனங்களுக்கே சென்று, தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்திவருகின்றனர்.திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, வெள்ளியம்பாளையத்தில் உள்ள, தனவர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நிறுவன பங்குதாரர்கள் ராமச்சந்திரன், தமிழரசன்,இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) முன்னாள் தலைவர்கள் பாலன், வெங்கடேஷ் துவக்கிவைத்தனர்.கோவை கே.ஜி., மருத்துவமனை மருத்துவக்குழுவினர், தொழிலாளர்களை பரிசோதித்து, ஊசி செலுத்தினர். இந்த நிறுவனத்தின் மூன்று கிளைகளில் மொத்தம் 1,300 தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களில், 200 பேருக்கு ஏற்கனவே, கடந்த 2020ல், அரசு மருத்துவமனை மூலம் தடுப்பூசி போடப்பட்டது. நேற்றைய முகாமில், 550 தொழிலாளருக்கு ஊசி போடப்பட்டது. ஊசி செலுத்திய தொழிலாளருக்கு, அதற்கான சான்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 550 தொழிலாளருக்கு, விரைவில் ஊசி போடுவதற்கான பணிகள் நடக்கின்றன.சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:கொரோனா இல்லாத திருப்பூரை உருவாக்குவதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பும், தினமலர் நாளிதழும் இணைந்து, பின்னலாடை தொழிலாளர்களுக்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது.தடுப்பூசி செலுத்தி, தங்கள் தொழிலாளரை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவருவதில், நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றன. நேற்று ஒருநாளில் மட்டும், மொத்தம் பத்து நிறுவனங்கள், 10 ஆயிரம் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, முழு வீச்சில் தொழிலாளருக்கு செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.முதல்கட்டமாக சி.ஐ.ஐ.,ல் உறுப்பினராக உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. உறுப்பினர் நிறுவனங்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டபின், மற்ற நிறுவனங்களுக்கு ஊசி பெற்றுத்தரப்படும்.சி.ஐ.ஐ., ல் உறுப்பினராக உள்ள நிறுவனங்கள் மட்டும், https://forms.gle/f3fwffaHwZMwfGLx7 என்கிற தளத்தில் தடுப்பூசி தேவை விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு,97911 60622 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X