திட்டமிட்டே சோக்சி தப்பினார் :சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தகவல்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி :'அமலாக்கத் துறை விசாரணையை தவிர்ப்பதற்காக வைர வியாபாரி மெஹுல் சோக்சி, வெளிநாடு தப்பிச் சென்றார்' என, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி மீது வங்கி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2018ல் அவர் வெளிநாட்டுக்கு தப்பினார். கரீபியன் நாடான
சோக்சி , :சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தகவல்

புதுடில்லி :'அமலாக்கத் துறை விசாரணையை தவிர்ப்பதற்காக வைர வியாபாரி மெஹுல் சோக்சி, வெளிநாடு தப்பிச் சென்றார்' என, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி மீது வங்கி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2018ல் அவர் வெளிநாட்டுக்கு தப்பினார். கரீபியன் நாடான ஆன்டிகுவா தப்பிச் சென்ற அவர், சமீபத்தில் அங்கிருந்தும் தப்ப முயன்றார்.
இந்நிலையில் வங்கி மோசடி தொடர்பான வழக்கில், துணை குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்சி செய்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் விசாரிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.வங்கியின் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி உதவியுடன், வங்கியில் தான் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களை அவர் வாங்கி, பதுக்கி வைத்திருந்தார். சோக்சியின் ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட சி.பி.ஐ., சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி செய்வதற்காக, வெளிநாடுகளில் சில போலி நிறுவனங்களை அவர் துவக்கியிருந்தார். அதன் இயக்குனர்களாக தன் ஊழியர்களை நியமித்திருந்தார். வங்கி மோசடி தொடர்பான விசாரணை துவங்கியதும், அவர்களை இந்தியா வரவேண்டாம் என தடுத்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக விசாரணையை தவிர்க்கும் வகையில், அவர் திட்டமிட்டே வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளது தெரிய வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூன்-202115:44:36 IST Report Abuse
Endrum Indian தவறு கண்டேன் சுட்டேன் கொண்டு வாருங்கள் யார் தப்பிக்கின்றார் என்று பார்க்கலாம்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
18-ஜூன்-202109:50:47 IST Report Abuse
Tamilnesan வங்கியின் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி உதவியுடன், வங்கியில் தான் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களை அவர் வாங்கி, பதுக்கி வைத்திருந்தார். சோக்சியின் ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட சி.பி.ஐ., சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. - செய்தி. துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டிக்கு நிச்சயம் இந்நேரம் பதவி உயர்வு கிடைத்திருக்கும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-ஜூன்-202108:46:13 IST Report Abuse
Darmavan இது ஏன் முடிவில்லாமல் போய் கொண்டேயிருக்கிறது .கேவலம் நீதி மன்றம் உடனே தீர்வு காண வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X