பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வியில் உள் ஒதுக்கீடு: வரவேற்பும், ஆலோசனைகளும்!

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
தமிழகத்தில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால், கடந்த ஆண்டில், 313 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 92 பி.டி.எஸ்., இடங்களும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தன. இந்நிலையில், தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், தமிழக

தமிழகத்தில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால், கடந்த ஆண்டில், 313 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 92 பி.டி.எஸ்., இடங்களும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தன. இந்நிலையில், தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது.

அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்கவே, இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்வியாளர்கள் கூறியதாவது:

ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வியாளர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை. இந்த ஒதுக்கீட்டால், இயல்பாகவே சில மாணவர்களுக்கு, அந்தந்த பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு, உள் ஒதுக்கீட்டுக்கு இணையான, 'சீட்'களை அந்தந்த கல்லுாரிகளுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.

மேலும், பொறியியல் படிக்க வரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான, விடுதி கட்டண செலவையும் அரசு ஏற்க வேண்டும். பி.ஸ்ரீராம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: மருத்துவ படிப்புகளில், சேர்க்கைக்கான இடங்கள் குறைவு. ஆனால், பொறியியல் படிப்புகளில், ஏராளமான இடங்கள் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களே நல்ல மதிப்பெண் எடுத்து, நல்ல கல்லுாரிகளில் சேருகின்றனர். அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு என, தனியே உள் ஒதுக்கீடு அவசியமில்லை.சாய் பிரகாஷ் லியோ முத்து, சாய்ராம் பொறியியல் கல்லுாரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில், உள்ஒதுக்கீடு வழங்குவது சரியானது தான்.

அதேசமயத்தில், பொறியியல் படிப்புகளில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, 5 சதவீதம், 'சூப்பர் நியூமரி ஒதுக்கீடு' என்ற முறையை அனுமதித்துள்ளது.அதன்படி, ஒரு கல்லுாரியில் ஒரு படிப்புக்கு, 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், கூடுதலாக, ஐந்து இடங்களை அதிகப்படுத்தலாம். இது, ஏழை, எளிய மாணவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

தமிழக அரசும், இந்த சூப்பர் நியூமரி ஒதுக்கீட்டை இங்கே அமல்படுத்தலாம். உள்ஒதுக்கீடு வாயிலாக, வாய்ப்பு பெற்ற மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு, அரசே கட்டணத்தை செலுத்துகிறது. அதேபோன்று, சூப்பர் நியூமரி ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்வி கட்டணத்தையும், அரசே ஏற்கலாம். ஐசரி கணேஷ், வேல்ஸ் பல்கலை கழகம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் உள் ஒதுக்கீடு, பலவழிகளில் நல்லது செய்யும்.

பணக்கார, படித்த மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு பயன்பெறுவர். அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.ஜி.விஸ்வநாதன், வேலுார் தொழில் நுட்ப பல்கலை கழகம்: எனக்கு இந்த முயற்சியில் உடன்பாடு உண்டு. ஆணையம் முடிவு செய்து, எவ்வளவு சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்களோ, அதைச் செய்யட்டும். என்னை பொறுத்தவரை, அரசு பள்ளி மாணவர்களும் மேலே உயரணும். நானே அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கஷ்டப்பட்டு படித்தவன் தான்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X