பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழப்புகள் அதிகம்; மறைக்கிறதா அரசு? ஏப்ரல், மே மாதத்தில் மிரட்டிய கொரோனா

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் கடந்தாண்டுகளை ஒப்பிடும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று இறப்புக்களை அரசு மறைந்துள்ளதாக தனியார் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்பு களை, அரசு மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இரண்டாம் அலைதமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல், இந்தாண்டு
 உயிரிழப்புகள் ,  அரசு? ஏப்ரல், மே மாதம், மிரட்டிய கொரோனா

சென்னை :தமிழகத்தில் கடந்தாண்டுகளை ஒப்பிடும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று இறப்புக்களை அரசு மறைந்துள்ளதாக தனியார் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்பு களை, அரசு மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இரண்டாம் அலை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல், இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தீவிரமானது. அதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்தன. ஆனால், குறைந்த அளவிலான உயிரிழப்புகளை மட்டுமே கொரோனா இறப்பாக அரசு கணக்கு காட்டியுள்ளது.கொரோனா உயிரிழப்பு கள் குறித்து, தனியார் அமைப்பு, மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், வேலுாரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஆறு மருத்துவமனைகளில், இறப்பு எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 2,000 என்ற சராசரி அளவே இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களிலும் இதே நிலை தான் இருந்தது.இந்தாண்டு ஏப்ரலில் 3,009; மே மாதம் 8,690 பேர் என 11 ஆயிரத்து 699 பேர் இறந்துள்ளனர். இவை, கடந்தாண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம்; மே மாதத்தின் இறப்பு நான்கு மடங்கு அதிகம்.


latest tamil newsகொரோனாவுக்கு முன் 2019 ஏப்., மே மாதங்களை விட, மிக அதிகம் பேர் இறந்துள்ளனர். இவற்றை ஒப்பிட்டால், இந்தாண்டு ஏப்., மே மாதங்களில் 7,262 முதல் 8,438 பேர் வரை கொரோனா தொற்றால் இறந்திருக்கக் கூடும்.ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை தினமும் வெளியிட்டு வரும் கொரோனா அறிக்கையில், இந்த ஆறு மருத்துவமனைகளில், ஏப்., மே மாதங்களில் 863 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்துஉள்ளது.இந்த ஆறு மருத்துவமனைகளில் இறப்பு வீதம், மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட எண்ணிக்கையை விட 13.7 சதவீதம் அதிகம். அதன்படி பார்த்தால், கொரோனா இறப்பு களின் எண்ணிக்கை 8.4 முதல் 9.8 மடங்கு வரை குறைத்து காட்டப்பட்டுஉள்ளது.


நிஜமான அறிக்கைஇது போன்று மாநிலம் முழுதும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8,108 பேர் முதல், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 பேர் வரை இருக்கலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படியே, இறந்ததற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.
கொரோனா தொற்றால் இறந்தாலும் அந்த காரணத்தை பதிவு செய்ய மருத்துவமனைகள் மறுக்கின்றன.எனவே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு அறிவித்துள்ள சலுகைகள் கிடைக்க இறப்புகளை ஆராய்ந்து, உண்மையான கொரோனா அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202100:04:19 IST Report Abuse
மதுரை விருமாண்டி மாநிலவாரியாக இந்த பட்டியலை வெளியிட பத்திரிக்கைக்கு மனசு வருமா ? தைரியம் உண்டா? இதே கணக்கை இரண்டு மாதங்களுக்கு மட்டும் என்றில்லாமல் 2018 இல் இருந்து எல்லா மாதங்களுக்கும், எல்லா மாநிலங்களுக்கும் இந்த கணக்கை காட்ட முடியுமா? இந்த இந்திய குன்றிய அரசின் சாவு எண்ணிக்கைகள் மற்ற நாடுகள் எல்லாம் ஏளனம் செய்து கேவலமாக பார்க்கும் நிலையில் தான் உள்ளது.. குன்றிய மருத்துவ அமைச்சர் சொல்லும் எண்ணிக்கையை போல ஐந்து முதல் பத்து மடங்கு வரை உண்மையான சாவுகள் எண்ணிக்கை உள்ளது என்று உலகமே வியந்து கழுவி ஊத்துகிறது..
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-ஜூன்-202115:16:32 IST Report Abuse
S. Narayanan Coronaa உயிர் இழப்பு மிக அதிகம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தான். எல்லாவற்றையும் திமுக அரசு மறைத்து மக்களுக்கு திரோகம் இழைத்து விட்டது. அதுவும் கோவையில் மிக மிக அதிகம்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202101:01:19 IST Report Abuse
மதுரை விருமாண்டிகொரோனா அம்மன் காப்பத்தலியா ? ஆடீம்கா கடைபிடித்த குமாரசாமி கணக்கீட்டு முறைகளை இன்னமும் பயன்படுத்தும் அதிகாரிகளை பந்தாடினால் போதும்.....
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-ஜூன்-202114:29:55 IST Report Abuse
Nakkeeran தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வு உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் நீதிமன்றங்களை அணுகி உண்மையை மக்களுக்கு எடுத்து கூறகூடாது
Rate this:
Devan - Chennai,இந்தியா
18-ஜூன்-202117:17:32 IST Report Abuse
Devanநீதி மன்றமே அரசை உயிரிழப்பை சரி பார்க்க சொல்லியிருக்கிறது மற்றும் சான்றிதழ் தருவதையும் சரிபார்க்க சொல்லியிருக்கிறது .அதனால் தான் இது வெளிவருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X