இது உங்கள் இடம்: வழிபாட்டில் மூக்கை நுழைக்காதீர்!

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேதம், ஆகம விதியை முறையாக கற்று, கோவில் கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு சேவையாற்றும் புனிதமான பணி, அர்ச்சகருடையது. இறைவனுக்கு கற்பூரம் காட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பது மட்டுமே, அர்ச்சகர் பணி என, தி.க.,வினர்
DMK, women priests, temples


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேதம், ஆகம விதியை முறையாக கற்று, கோவில் கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு சேவையாற்றும் புனிதமான பணி, அர்ச்சகருடையது. இறைவனுக்கு கற்பூரம் காட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பது மட்டுமே, அர்ச்சகர் பணி என, தி.க.,வினர் மற்றும் அதிலிருந்து பிரிந்த கட்சிகள் நினைக்கின்றன.

அதனால் தான், தி.க., வழி வந்த தி.மு.க.,வும் ஆட்சிக்கு வந்த உடன், ஏதோ அரசு இளநிலை உதவியாளரை தேர்வு செய்வது போல, அர்ச்சகர் நியமனத்தையும் மாற்ற நினைக்கிறது. ஜனநாயக அரசு, எந்த மதத்திற்கும் விரோதமாக செயல்படக் கூடாது. அவற்றின் வழிபாடு முறையில் குறுக்கீடு செய்யக் கூடாது. முதல்வர் ஸ்டாலின், தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து, ஆளுங்கட்சியினரின் மத விரோத போக்கை தடுக்க வேண்டும்.


latest tamil newsகோவிலில் முறையாக வழிபாடு நடைபெற, காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம் தொடர, தி.மு.க., அரசு அனுமதிக்க வேண்டும். ஹிந்து மட்டுமல்ல; கிறிஸ்துவ, முஸ்லிம் மத வழிபாடு சுதந்திரத்திலும், ஆட்சியாளர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது. மதச்சார்பற்ற அரசு என்றால், எந்த மதத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ, ஆட்சியாளர்கள் செயல்படக் கூடாது என்பதே பொருள். இதை தி.மு.க., அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
19-ஜூன்-202100:42:15 IST Report Abuse
muthu Govt wants all e shall be allowed to do pooja to god including woman . What is wrong in that concept . All are equal in front of god.
Rate this:
Cancel
Mano - Madurai,இந்தியா
19-ஜூன்-202100:25:16 IST Report Abuse
Mano தூய்மையும் பக்தியும் மனிதனாக பிறந்தவர் ஒவ்வொருக்கும் உள்ளது. இதில் மேன் மக்கள் கீழ் மக்கள் என்று வேறுபாடு கூடாது. தகுதியானவர் அனைவருக்கும் மத வழிப்பாட்டிற்கு உரிமை உள்ளது, அது எந் மதமாக இருந்தாலும் சரி.
Rate this:
Cancel
Gowdham - Chennai ,இந்தியா
18-ஜூன்-202122:13:52 IST Report Abuse
Gowdham அரசியல் அமைப்பு சட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். எந்த துறை அமைச்சராக இருக்கிறாரோ அந்த துறை சம்மந்தபட்ட 50 கேள்விகள் கேட்டு சரியான பதில் வந்தால் மட்டுமே மந்திரி இல்லேன்னா நீ எந்திரின்னு சொல்லனும். இதை எல்லா மீடியா முன்னாடியும் live tele பண்ணனும். முதலமைச்சர் னா எல்லா துறை பற்றிய அறிவு இருக்கனும் இல்லேன்னா உங்க கட்சியிலே யாருக்கு அறிவு இருக்கோ அவுங்கள முதலமைச்சர் ஆக்கிட வேண்டியதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X