பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை உயர்வு: ஜூன் 28ல் லாரி 'ஸ்டிரைக்'

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : ஜூன் 28ம் தேதி, ஒரு நாள் லாரி 'ஸ்டிரைக்' நடத்த, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இது குறித்து அதன் தலைவர் குல்தரங் சிங் அத்வால் அறிக்கை:டீசல் விலை உயர்வால், போக்குவரத்து துறை சார்ந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுகின்றனர். அதை மீட்க மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள்
Lorry Strike, Fuel price hike, Truck, Strike

சென்னை : ஜூன் 28ம் தேதி, ஒரு நாள் லாரி 'ஸ்டிரைக்' நடத்த, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அதன் தலைவர் குல்தரங் சிங் அத்வால் அறிக்கை:டீசல் விலை உயர்வால், போக்குவரத்து துறை சார்ந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுகின்றனர். அதை மீட்க மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் வைத்து, நாடு முழுதும் ஒரே விலையையும், விலை மாற்றத்தை, ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் நிர்ணயிக்க வேண்டும்.


latest tamil newsவாகன கடன் தவணைக்கு, ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும். 'இ - வே பில்' மீதான குளறுபடிகள், போலீஸ், ஆர்.டி.ஓ., மற்றும் ஜி.எஸ்.டி., அலுவலர்களின் ஊழலை தடுக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை, பிரதமர், மத்திய - மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களிடம், 28ல் வழங்க உள்ளோம். அன்று, வாகன தொழிலின் கறுப்பு நாளாக அனுசரித்து, ஒரு நாள் லாரிகளை நிறுத்த உள்ளோம். கோரிக்கைகளுக்கு ஜூலை, 28க்குள் தீர்வு கிடைக்காவிட்டால், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஜூன்-202116:50:18 IST Report Abuse
g.s,rajan பொதுமக்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் மத்திய மாநில அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட வேண்டும் ,மக்களின் போராட்டத்தைக் கண்டு மத்திய மாநில அரசுகள் மிரள வேண்டும் ,பெட்ரோல் டீசல் விலையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் .சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் ,உண்ணா விரதமும் இருக்கலாம் .அரசாங்கத்தின் அநியாய போக்கு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது .இதே நிலைத்தொடர்ந்தாள் மக்கள் விரோத அரசை மக்கள் சினம் கொண்டு தூக்கி எறிவார்கள் .நாட்டில் விலைவாசி குறைய எரிபொருள் விலையைக் கட்டாயம் மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் அதற்கு விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகளைக் கட்டாயம் குறைக்க வேண்டும் .பொது மக்களின் கஷ்டம் கருதி விலைக்கு குறைப்பு செய்வார்களா??? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
18-ஜூன்-202114:13:11 IST Report Abuse
Selvaraj Thiroomal மேலை நாடுகளில் இதுபோன்ற விலையேற்றத்தை கண்டித்து நடந்த பேரணியில் லாரி, கார், பஸ் என்று அனைத்துவிதமான வாகனங்களையும் சாலையில் அந்ததந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றனர். ஒரேமணி நேரத்தில் விலையுயர்வு வாபஸ் பெறப்பட்டது. இந்தியாவில் அனைவருக்கும் பாதிப்பு இருந்தாலும், லாரி உரிமையாளர்கள் மட்டுமே போராடுவதால் தான் அரசு கவலையின்றி செயல்படுகிறது. எந்தவொரு கொள்கையிலும் சராசரி மக்களைப்பற்றி சிந்திக்கும் அரசாக இன்றுவரை நடந்ததில்லை. பொதுமக்களை லாரி உரிமையாளர்கள் நேரடியாக தொடர்புகொண்டு போராட்டத்தில் பங்கெடுக்க முயற்சிக்கவேண்டும். அரசிற்கு இன்றுள்ள ஒரே நிதி ஆதாரம், பெட்ரோலிய பொருட்கள் மட்டுமே, இது பல ஆண்டுகளாகவே தொடர்வது எவ்வளவு கவலைப்படவேண்டிய நிலை
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
18-ஜூன்-202113:53:18 IST Report Abuse
sahayadhas கண்டிப்பாக விலை ரூ 100 எட்ட வேண்டும். ஹிந்துகள் அலறி ஓட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X