பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரம் கிளை நுாலகம் தரம் உயர்த்த வலியுறுத்தல்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரம் கிளை நுாலகத்தை முழுநேர தாலுகா நுாலகமாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், மேல்மலையனுார் பகுதிகளை முன்னாள் முதல்வர் ஜெ., தனி தாலுகாவாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் இப்பகுதிகளில் உள்ள கிளை நுாலகங்களை முழுநேர தாலுகா நுாலகமாக அரசு தரம் உயர்த்தும்

கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரம் கிளை நுாலகத்தை முழுநேர தாலுகா நுாலகமாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், மேல்மலையனுார் பகுதிகளை முன்னாள் முதல்வர் ஜெ., தனி தாலுகாவாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் இப்பகுதிகளில் உள்ள கிளை நுாலகங்களை முழுநேர தாலுகா நுாலகமாக அரசு தரம் உயர்த்தும் என இப்பகுதி இளைஞர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போதைய அரசு, கண்டாச்சிபுரம் கிளை நுாலகத்தை தரம் உயர்த்தவேண்டும். முந்தைய அரசால் தாலுகாவாக அறிவிக்கப்பட்ட ஊர்களில் உள்ள நுாலகங்களை முழுநேர நுாலகங்களாக மாற்றி உத்தரவிட வேண்டும்.இதனால் கிராமப்புறங்களில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X