கங்கை நதியில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கங்கை நதியில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (5)
Share
காஜிபூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில், பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.உ.பி.,யின் காஜிபூர் நகரில் கங்கை நதிக்கரையில், சிலர் நேற்று முன்தினம் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடி பார்த்த போது, கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் இருந்து அழுகுரல் கேட்பது தெரியவந்தது.அந்த
Ganga,Newborn Girl, Wooden Box

காஜிபூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில், பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

உ.பி.,யின் காஜிபூர் நகரில் கங்கை நதிக்கரையில், சிலர் நேற்று முன்தினம் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடி பார்த்த போது, கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் இருந்து அழுகுரல் கேட்பது தெரியவந்தது.


latest tamil news


அந்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்தபோது, அதற்குள் அழகான பெண் குழந்தை இருந்தது. அதனுடன் அந்த குழந்தையின் ஜாதகம் மற்றும் அம்மன் படங்களும் இருந்தன. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மீட்ட அவர்கள், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X