பொது செய்தி

இந்தியா

குணமடைந்த பின் பணிக்கு திரும்பலாம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-''கொரோனா ஏற்பட்ட ஊழியர்கள் முழுமையாக குணமடைந்து, தடுப்பூசி பெற்று பணிக்கு ஆஜராகலாம். அதுவரை ஊழியர்கள், விடுமுறையில் இருப்பர். அதற்காக அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது,'' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத் தெரிவித்தார்.ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பஸ் போக்குவரத்தை துவக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., உட்பட, நான்கு

பெங்களூரு-''கொரோனா ஏற்பட்ட ஊழியர்கள் முழுமையாக குணமடைந்து, தடுப்பூசி பெற்று பணிக்கு ஆஜராகலாம். அதுவரை ஊழியர்கள், விடுமுறையில் இருப்பர். அதற்காக அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது,'' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத் தெரிவித்தார்.ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பஸ் போக்குவரத்தை துவக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., உட்பட, நான்கு போக்குவரத்துக்கழகங்கள் தயாராகின்றன.கொரோனா தடுப்பூசி பெற்ற ஊழியர்கள் மட்டும், பணிக்கு ஆஜராக வேண்டும் என, போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.பயணியரின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால் இது ஊழியர்களை, நெருக்கடியில் தள்ளியுள்ளது.கொரோனா இரண்டாவது அலையில், 2,500 முதல், 3,000 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இவர்கள் குணமடைந்துள்ளனர். இவர்கள், கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.ஆர்.டி.சி., என, பல்வேறு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றுகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர், அரசின் விதிமுறைப்படி, மூன்று மாதம் வரை, தடுப்பூசி பெற வாய்ப்பில்லை. தடுப்பூசி போடாததால், பணிக்கு செல்ல முடியாது.எனவே, கட்டாய விடுமுறையில் இருக்க வேண்டியுள்ளதால், ஊதியம் பிடித்தமாகும். பணம் இல்லாமல் குடும்பத்தை, எப்படி நிர்வகிப்பது என தெரியாமல், விழி பிதுங்குகின்றனர்.கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத் கூறியதாவது:கொரோனா தொற்று ஏற்பட்ட பின், ஒரு மாதம் பராமரிப்பில் இருக்க வேண்டும். அதுவரை அவர்களை பணிக்கு நியமிக்க முடியாது. அவர்களை பணிக்கு நியமிப்பதும், சரியாக இருக்காது.எனவே ஊழியர்கள் முழுமையாக குணமடைந்து, தடுப்பூசி பெற்று பணிக்கு ஆஜராகலாம். அதுவரை ஊழியர்கள், விடுமுறையில் இருப்பர். அதற்காக அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது.தனிப்பட்ட காரணங்களை பரிசீலிக்க வேண்டும். சிலர் போராட்டத்தில் பங்கேற்று, அந்த நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். சில ஊழியர்கள் இறந்தனர். இத்தகைய ஊழியர்களுக்கு, ஊதியம் உட்பட, மற்ற சலுகைகள் கிடைக்கவில்லை. அனைத்தையும் ஆய்வு செய்து, முடிவெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X