கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்

Added : ஜூன் 18, 2021
Share
மைசூரு-''மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்துாரி, என் மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்துவேன்,'' என, மைசூரு அபிவிருத்தி ஆணைய தலைவர் ராஜிவ் தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:எம்.எல்.ஏ., மகேஷுக்கும், எனக்கும் இடையே எந்த விதமான தொழில் தொடர்பும் இல்லை. நான் அவருடன் சேர்ந்து தொழில் நடத்தவில்லை.ஆனால் நில ஆக்கிரமிப்பு

மைசூரு-''மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்துாரி, என் மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்துவேன்,'' என, மைசூரு அபிவிருத்தி ஆணைய தலைவர் ராஜிவ் தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:எம்.எல்.ஏ., மகேஷுக்கும், எனக்கும் இடையே எந்த விதமான தொழில் தொடர்பும் இல்லை. நான் அவருடன் சேர்ந்து தொழில் நடத்தவில்லை.ஆனால் நில ஆக்கிரமிப்பு விஷயத்தில், என் பெயரை, ரோகிணி சிந்துாரி இழுத்துள்ளார்.இது தொடர்பாக, எனக்கு நெருக்கமானவர்கள், மூத்தவர்களுடன் ஆலோசித்து, சட்டப்போராட்டம் நடத்துவேன்.லிம்பாம்புதிபாளையாவில், எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எந்த குளறுபடியும் இல்லை. அது என் தந்தையின் சொத்து.என் பெயரை குறிப்பிட்டது பற்றி, ரோகிணியிடம் தான் கேட்க வேண்டும். நான் எந்த முடிவையும், தன்னிச்சையாக எடுக்கவில்லை.மைசூரு நகர அபிவிருத்தி ஆணையத்தில், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் உட்பட, 26 உறுப்பினர்கள் உள்ளனர்.சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடக்கவில்லை. என் வாழ்நாளில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதில்லை.எனக்கெதிராக ஊடகங்களில், தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அரசின் எந்த இடத்தையும், இதுவரை நான் வாங்கவில்லை.ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டி, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கிய திருப்தி எனக்குள்ளது.மைசூரை பசுமையாக்க, என் சொந்தப்பணத்தில், 75 லட்சம் ரூபாய் செலவழித்து, மரக்கன்றுகள் நடும் பணிகள் நடக்கிறது. ஜாதி, மதம் பேதமின்றி பணியாற்றுகிறேன். எனக்கு விளம்பர பைத்தியமில்லை. சட்டத்துக்குட்பட்டே என் தொழில்கள் அனைத்தும் நடக்கின்றன.சரியானபடி வரி செலுத்தி, தொழில் செய்கிறேன். என் மீது, தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுகிறது. யாரோ கூறியதை நம்பாமல், என் பணிகளை மைசூரு மக்கள் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X