கொச்சிக்கு அருகே கடலுக்கடியில் தீவு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொச்சிக்கு அருகே கடலுக்கடியில் தீவு?

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (8)
Share
கொச்சி : கேரள மாநிலம் கொச்சி அருகே, கடலுக்கடியில் தீவு போன்ற அமைப்பு உள்ளதாக, 'கூகுள் மேப்' இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், அரபிக் கடலில், அவரை விதை வடிவத்தில் ஒரு அமைப்பு உள்ளது, கூகுள் மேப் எனப்படும் வரைபட இணையதளத்தில் இது பதிவாகி உள்ளது. இது, 8 கி.மீ., நீளமும், 3.5 கி.மீ.,
Google Maps, Underwater Island, Kochi, Arabian Sea

கொச்சி : கேரள மாநிலம் கொச்சி அருகே, கடலுக்கடியில் தீவு போன்ற அமைப்பு உள்ளதாக, 'கூகுள் மேப்' இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், அரபிக் கடலில், அவரை விதை வடிவத்தில் ஒரு அமைப்பு உள்ளது, கூகுள் மேப் எனப்படும் வரைபட இணையதளத்தில் இது பதிவாகி உள்ளது. இது, 8 கி.மீ., நீளமும், 3.5 கி.மீ., அகலமும் உடையதாக உள்ளது. கடலுக்கடியில் அமைந்துள்ள இந்த திடீர் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


கடலுக்கடியில், இயற்கையாக புதிய தீவு உருவாகி வருகிறதா என்பது குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மீன்வளம் மற்றும் கடலாய்வு பல்கலை சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கொச்சி துறைமுகம் பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்ததால், கடலுக்கடியில் மணல் குவிந்து, இதுபோன்ற அமைப்பு உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும், எர்ணாகுளம் மாவட்டம் செல்லனம் பகுதியில் கடலரிப்பு, 2017ல் இருந்து அதிகமாக உள்ளது. அதனால் தற்போது உருவாகியுள்ள அமைப்பில் உள்ள மணல் அல்லது களிமண் மூலம், கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் ஆராயப்பட உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X