பொது செய்தி

இந்தியா

வீட்டு உரிமையாளர்கள் வாடகை குறைப்பு

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனா குறைந்ததால், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பணியாளர்கள் பெங்களூரு திரும்புவதால், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை குறைத்துள்ளனர்.பெங்களூரில் கொரோனா முதல் அலையின் போது பெரும்பான்மையோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதால், வீடுகளை காலி செய்யாமல் சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர்கள் வாடகை விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.பலரும்

பெங்களூரு-கொரோனா குறைந்ததால், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பணியாளர்கள் பெங்களூரு திரும்புவதால், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை குறைத்துள்ளனர்.பெங்களூரில் கொரோனா முதல் அலையின் போது பெரும்பான்மையோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதால், வீடுகளை காலி செய்யாமல் சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர்கள் வாடகை விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.பலரும் மீண்டும் பெங்களூரு திரும்பிய பின், ஊரடங்கு நாட்களுக்கும் சேர்த்து உரிமையாளர்கள் வாடகை வசூலித்தனர்.இந்நிலையை இரண்டாவது அலை மாற்றியுள்ளது. இந்த கால கட்டத்திலும், பலரும் வீடுகளை காலி செய்து விட்டு சென்றனர்.இதனால் வீட்டு உரிமையாளர்கள், பொருளாதார நிலையில் பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்போது, பலரும் பெங்களூரு திரும்பி கொண்டுள்ளனர். இந்த வேளையில், உரிமையாளர்கள் வீடுகளின் வாடகையை, 15 சதவீதம் வரை குறைத்து வருகின்றனர்.பெங்களூரு மட்டுமின்றி, மங்களூரு, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வீடுகளின் வாடகை பெரிதளவில் குறைக்கப்பட்டுள்ளது.நான்கு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள், 50 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், 25ஆயிரம் ரூபாய் வாடகை, 18 ஆயிரம் ரூபாய் எனவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திராநகர், ஜெயநகர், சதாசிவநகர் பகுதிகளில் வாடகையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.கொரானோ காலத்திலும் வீடுகள் காலியாகாமல் இருந்ததே இதற்கு காரணமாகும்.வீட்டு உரிமையாளர்கள் கூறியதாவது:முதல் அலையின்போது வாடகையை குறைக்கவில்லை. தற்போது பலரும் வேலை இழப்பை சந்தித்து, பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதால், வாடகை தொகை குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அபிவிருத்திக்காக கட்டடப்பணிகளை மேற்கொண்ட பல உரிமையாளர்கள் சிக்கலில் உள்ளனர்.வாடகை தொகை பெற முடியாததால், கட்டடப்பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை.வங்கிகளில் பெற்ற கடனுதவியை அடைக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். வாடகை தொகையை குறைப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X