பொது செய்தி

இந்தியா

கோவிட் விழிப்புணர்வு இணையதளம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
தட்சிணகன்னடா-காக்ஸ்டவுன் செயின்ட் அலோசியஸ் கல்லுாரியின், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேசிய மாணவர் படை விமானப்பிரிவு மாணவர்கள் எட்டு பேர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 'கருட் சாரதி' என்ற இணையதளத்தை வடிவமைத்துள்ளனர்.விமானப்பிரிவு மாணவர் ஆல்ஸ்டர் தலைமையில் மாணவர்கள் ஹயான், மனிஷ், ஜாயல், அனுஷா, ஷெரில், பிரதிக், கென்னத் உள்ளிட்டோர் இணைந்து,

தட்சிணகன்னடா-காக்ஸ்டவுன் செயின்ட் அலோசியஸ் கல்லுாரியின், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேசிய மாணவர் படை விமானப்பிரிவு மாணவர்கள் எட்டு பேர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 'கருட் சாரதி' என்ற இணையதளத்தை வடிவமைத்துள்ளனர்.விமானப்பிரிவு மாணவர் ஆல்ஸ்டர் தலைமையில் மாணவர்கள் ஹயான், மனிஷ், ஜாயல், அனுஷா, ஷெரில், பிரதிக், கென்னத் உள்ளிட்டோர் இணைந்து, இணையதளத்தை வடிவமைத்துள்ளனர்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கொரோனா குறித்த தகவல்கள்; நோய்த்தொற்று ஏற்படாமல் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது; நகரில் உள்ள ரத்த வங்கிகள், ஆம்புலன்ஸ் சேவைகளின் தொடர்பு எண்கள் மற்றும் ஆக்சிஜன் வழங்கும் பிரிவுகளின் தொடர்புகள். நாட்டில் கிடைக்கும் பல்வேறு தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள், கொரோனா பரிசோதனை செய்வது, பிளாஸ்மா நன்கொடை தொடர்பான தகவல்கள்; விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல சுவாரஸ்யமான போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து ஆல்ஸ்டர் கூறியதாவது:கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். இச்சூழ்நிலையில், நேரடியாக சென்று மக்களை அணுகுவது எளிதானதல்ல. எனவே, இந்த இணையதளத்தை வடிவமைக்க திட்டமிட்டோம். ஆரம்பத்தில், ஒரு தளத்தை வடிவமைப்பது பெரிய சவாலாக இருந்தது. பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட பின், நாங்கள் இறுதியாக வெற்றி பெற்றோம்.பொதுமக்கள், விரிவுரையாளர்களிடமிருந்து நல்ல கருத்துகளை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இணை என்.சி.சி அதிகாரி ஆல்வின் ஸ்டீபன் மிஸ்கித் கூறியதாவது:இதுகுறித்த சிந்தனை எனக்கிருந்தது. அதனால் மாணவர்களுக்கு வழிகாட்ட முடிந்தது. சில ஆராய்ச்சி செய்தபின் இந்த இணையதளத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.வழக்கமாக, நாங்கள் என்.சி.சி., மூலம் பல செயல்களை செய்கிறோம். அதை ஒருங்கிணைத்து ஒரு ஆவணமாக, செய்துள்ளோம்.மேலும் இணையதளம் குறித்து கூடுதலாக அறிந்து கொள்ள https://garudsaarathi.wixsite.com/6karairsqn என்ற இணைப்பில் பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X