தொடர் மழையால், சிக்கமகளூரு களசாவின், ஹெப்பாலே பாலம் மூழ்கும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொடர் மழையால், சிக்கமகளூரு களசாவின், ஹெப்பாலே பாலம் மூழ்கும் அபாயம்

Added : ஜூன் 18, 2021
Share
சிக்கமகளூரு-மலைப்பகுதிகளில் தொடர் மழையால், சிக்கமகளூரு களசாவின், ஹெப்பாலே பாலம் மூழ்கும் கட்டத்தை எட்டியுள்ளது.சிக்கமகளூரு மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. களசா நகரிலிருந்து, ஹொரநாடு கிராமத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், ஹெப்பாலே பாலம் மூழ்கும் கட்டத்தை எட்டியுள்ளது.நான்கைந்து நாட்களாக, தொடர் மழை பெய்வதால், பத்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சிக்கமகளூரு-மலைப்பகுதிகளில் தொடர் மழையால், சிக்கமகளூரு களசாவின், ஹெப்பாலே பாலம் மூழ்கும் கட்டத்தை எட்டியுள்ளது.சிக்கமகளூரு மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. களசா நகரிலிருந்து, ஹொரநாடு கிராமத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், ஹெப்பாலே பாலம் மூழ்கும் கட்டத்தை எட்டியுள்ளது.நான்கைந்து நாட்களாக, தொடர் மழை பெய்வதால், பத்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குதிரேமுக் சுற்றுப்பகுதிகளின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், ஆறுகள் களைகட்டியுள்ளது. ஆனால் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.மூடிகரேவின் சார்மாடிகாட்டில், நுாற்றுக்கணக்கான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மழையால் நீர் வரத்து அதிகரித்து, இயற்கை அழகு கூடியுள்ளது. இவ்வழியாக வாகனங்களில் செல்லும் பயணியர், வாகனத்தை நிறுத்தி, நீர் வீழ்ச்சிகளை ரசிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X