மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் விரிசல்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில், 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட காங்., முடிவு செய்துள்ளது, ஆளும் கூட்டணியில் விரிசலை ஆழமாக்கி உள்ளது.மஹாராஷ்டிராவில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால், இந்த புதிய கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி கட்சிகளுக்கு இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சலசலப்பு
Maharashtra, NCP, Congress, Shiv Sena

மும்பை: மஹாராஷ்டிராவில், 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட காங்., முடிவு செய்துள்ளது, ஆளும் கூட்டணியில் விரிசலை ஆழமாக்கி உள்ளது.

மஹாராஷ்டிராவில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால், இந்த புதிய கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி கட்சிகளுக்கு இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. மாநில காங்., தலைவர் நானா படோல் சமீபத்தில் பேசுகையில், 'வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மஹாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில், காங்., தனித்து போட்டியிடும்' என்றார்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான காங்., தனித்து போட்டியிடும் என, மாநில காங்., தலைவர் கூறி உள்ளார். அரசின் ஒரு அங்கமாக அவர்கள் இருப்பர்; எனினும் அவர்கள் தனித்து போட்டியிடலாம். இனி, இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சியும் சேர்ந்து என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சு, கூட்டணியில் உள்ள விரிசலை உறுதிபடுத்துவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சைக்கிள் கேப்புல பிளேனை உற்றுங்கப்பா முடிவா நீங்க அசர்றப்ப இன்னொருத்தன் உடப்போறான் பாருங்க
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-ஜூன்-202117:58:10 IST Report Abuse
r.sundaram இதற்குத்தான் பிஜேபி காத்துக்கொண்டு இருக்கிறது. இப்போது பிஜேபியின் அருமை சிவசேனாவுக்கு தெரிய வரும். எல்லோரும் எப்போதும் கெட்டிக்காரர்களாக இருக்க முடியாது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-202116:51:39 IST Report Abuse
J.V. Iyer அதிகாரம், பணம் பிரித்துக்கொள்வதில் சண்டை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X