பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில் நூதன வழி கண்டுப்பிடிப்பு

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பல்லாரி-கிராமங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில், பல்லாரி மாவட்ட சுகாதார அதிகாரிகள், நுாதன வழியை கண்டுப்பிடித்துள்ளனர்.பல்லாரியில், கொரோனாவை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.ஆனால், கிராமத்தினர், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று, தடுப்பூசி பெற தயங்குகின்றனர்.இதை உணர்ந்த, சுகாதார

பல்லாரி-கிராமங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில், பல்லாரி மாவட்ட சுகாதார அதிகாரிகள், நுாதன வழியை கண்டுப்பிடித்துள்ளனர்.பல்லாரியில், கொரோனாவை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.ஆனால், கிராமத்தினர், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று, தடுப்பூசி பெற தயங்குகின்றனர்.இதை உணர்ந்த, சுகாதார அதிகாரிகள், விவசாயிகள் வேலை செய்யும் வயல்களுக்கு சென்று, கொரோனா தடுப்பூசி போடுகின்றனர்.சண்டூரின் கரெகொப்பா கிராமத்தில், இரண்டு நாட்களில் சுகாதார ஊழியர்கள், தடுப்பூசி உட்பட, மற்ற மருத்துவ சாதனங்களுடன், வயல்களுக்கு சென்று, அங்கு பணியாற்றிய 50 விவசாயிகளுக்கு, தடுப்பூசி போட்டனர்.ஊழியர்களின் செயல், மற்றவருக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.மாவட்ட சுகாதார அதிகாரி ஜனார்த்தன் கூறியதாவது:நிலங்களில் பயிரிடும் நேரம் என்பதால், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வந்து, கொரோனா தடுப்பூசி பெற, கிராமத்தினருக்கு நேரமிருக்காது.பல்லாரி, விஜயநகர் மாவட்டங்களில், கொரோனா அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடுவது அவசியம்.சுகாதார ஊழியர்கள், தடுப்பூசி போடுவதற்காக, கரேகொப்பா கிராமத்திற்கு சென்ற போது, பலரும் நிலத்தில் இருப்பது தெரிந்தது. எனவே நாங்களும் அங்கு சென்று, தடுப்பூசி போட முடிவு செய்தோம்.தற்போது மூன்று டாக்டர்கள், ஆறு ஆஷா ஊழியர்கள் கொண்ட குழுவினர், அந்தந்த கிராமங்களின் விளை நிலங்களுக்கு சென்று, தடுப்பூசி போடுகின்றனர்.வரும் நாட்களில், மேலும் அதிகமான விவசாயிகளுக்கு, தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X