பொது செய்தி

இந்தியா

முதியவர்களுக்கான உதவி எண் 1090ல் 18 மாதங்களில் 2,000 புகார்கள் பதிவு

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில் முதியவர்களுக்கான உதவி எண் 1090ல், கடந்த 18 மாதங்களில் 2,000 புகார்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதியவர்களுக்கான உதவி எண் அமைப்பின் பொறுப்பாளர் ராதா மூர்த்தி கூறியதாவது:சர்வதேச முதியவர்கள் தினத்தையொட்டி முதியவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்க www.stopelderabuse.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவி எண் கிடைக்காத போது, முதியவர்கள்

பெங்களூரு-கர்நாடகாவில் முதியவர்களுக்கான உதவி எண் 1090ல், கடந்த 18 மாதங்களில் 2,000 புகார்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதியவர்களுக்கான உதவி எண் அமைப்பின் பொறுப்பாளர் ராதா மூர்த்தி கூறியதாவது:சர்வதேச முதியவர்கள் தினத்தையொட்டி முதியவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்க www.stopelderabuse.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவி எண் கிடைக்காத போது, முதியவர்கள் இந்த இணைப்பில் புகார்களை பதிவு செய்யலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கில் பல முதியவர்கள் தங்கள் மகன்கள் அல்லது உறவினர்களால் பெரிதும் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.முதியவர்கள் மனதை காயப்படுத்தும் வகையில் பேசுவது, உடலளவில் காயப்படுத்துதல் போன்ற புகார்கள் உதவி எண்ணில் அதிகம் பதிவாகியுள்ளன.சில நாட்களுக்கு முன்பு, 80 வயது முதியவர் ஒருவர், மகன்கள் தன்னை காயப்படுத்துவதாக புகார் அளித்திருந்தார். பல வீடுகளில் இத்தகைய கொடுமைகள் நடந்தாலும், பெரியவர்கள் வெளியில் சொல்வதில்லை.கடந்தாண்டு, ஏப்., முதல் நடப்பாண்டு, மே வரை 2,087 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில், 43 சதவீதம் உடளவில் காயப்படுத்தியதாக வந்த புகார்கள்.கடந்த, 2019 ஏப்., 2020 மார்ச் வரை பதிவான புகார்களை விட, 2020 முதல் 2021 மே வரை, 71 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. மாநிலத்தில் முதியவர்களுக்கான உதவி எண் 1090ல், கடந்த 18 மாதங்களில் 2,000 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த உதவி எண் மற்றும் இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X