பொது செய்தி

இந்தியா

அரசு பள்ளி மாணவர்களின் விபரங்கள் மற்றும் கல்வித்தரத்தை பதிவு செய்ய உத்தரவு

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-அரசு பள்ளி மாணவர்களின் விபரங்கள் மற்றும் கல்வித்தரத்தை தனித்தனியாக பதிவு செய்வதற்கு ஆசிரியர்களுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களின் விபரம், அவர்களின் கல்வி நிலை என சுழற்சி முறையில் தொடர்ந்து ஆய்வு செய்து, தனித்தனி பதிவேடுகளாக பராமரித்து வருகின்றனர்.ஆனால் அரசு

பெங்களூரு-அரசு பள்ளி மாணவர்களின் விபரங்கள் மற்றும் கல்வித்தரத்தை தனித்தனியாக பதிவு செய்வதற்கு ஆசிரியர்களுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களின் விபரம், அவர்களின் கல்வி நிலை என சுழற்சி முறையில் தொடர்ந்து ஆய்வு செய்து, தனித்தனி பதிவேடுகளாக பராமரித்து வருகின்றனர்.ஆனால் அரசு பள்ளிகளில் இத்தகைய தொடர் ஆய்வு என எதுவும் இல்லை. மாணவர்களின் கல்விநிலை குறித்த தனித்தனி விபரங்கள் இல்லாததால், அவர்களின் தேர்ச்சியின் போது பாதிக்கிறது.இந்த பாதிப்புகளை தவிர்க்க, அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விநிலை உட்பட அனைத்து விபரங்களையும் தனித்தனியாக தொடர் ஆய்வு நடத்தி பராமரிக்க வேண்டும்.புதிய கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் இப்பதிவை மேற்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் தொடர்ந்து மாணவர் திறன் பதிவு தளத்தில் பதிவிட வேண்டும்.இவ்வாறு கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X