பொது செய்தி

இந்தியா

கரை ஒதுங்கிய இழுவை படகு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படவில்லை.'

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
தட்சிணகன்னடா-'டாக்டே' புயலால் நீரில் மூழ்கி, படுபித்ரி அருகே கரை ஒதுங்கிய இழுவை படகு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படவில்லை.'டக்டே' புயலின் போது, புதிய மங்களூரு துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற இழுவை படகு அலையில் அடித்து செல்லப்பட்டது. படுபித்ரி கடற்கரையில், படகு கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. கரையில் சிக்கிய படகை, மே 25ல் தொழில்நுட்ப

தட்சிணகன்னடா-'டாக்டே' புயலால் நீரில் மூழ்கி, படுபித்ரி அருகே கரை ஒதுங்கிய இழுவை படகு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படவில்லை.'டக்டே' புயலின் போது, புதிய மங்களூரு துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற இழுவை படகு அலையில் அடித்து செல்லப்பட்டது. படுபித்ரி கடற்கரையில், படகு கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. கரையில் சிக்கிய படகை, மே 25ல் தொழில்நுட்ப பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் படகு மங்களூரு துறைமுகத்துக்கு வரவில்லை. இந்த படகை படுபித்ரியில் வைத்துக்கொள்வது அல்லது அங்கேயே உடைப்பது என இழுவை படகு நிறுவனம் அறிவித்தது. ஆனால் உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் படகை, குஜராத் அல்லது மங்களூரு கொண்டு செல்ல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.குஜராத்தை சேர்ந்த இழுவை படகு நிறுவன அலுவலர்கள் கூறியதாவது:படகு மேலும் சேதமாவதற்கு முன், மங்களூரு அல்லது குஜராத் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த படகின் மதிப்பு எட்டு முதல் பத்துகோடி ரூபாய் வரை இருக்கும்.அதிக இழப்பு ஏற்படுத்துவதற்கு முன், படகை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். படகில் உள்ள எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'வணிக கடல் துறை அனுமதி இன்னும் வரவில்லை. மழைக்காலத்தில் அனுமதி வழங்க முடியாது என்கின்றனர். 'இதனால் மழைகாலம் முடியும் வரை படுபித்ரியில் படகை வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X