பொது செய்தி

இந்தியா

900 கோடி டாலர்கள் இழப்பு: ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சி கண்டதால், அவரது சொத்து மதிப்பு குறைந்து, ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். தற்போது பட்டியலில் அம்பானியை விட பின் தங்கியுள்ளார்.அதானியின் 2-ம் இடத்தை 'நொங்பூ ஸ்பிரிங்' எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். என்.எஸ்.டி.எல்., எனப்படும்
Billionaire, industrialist, Gautam Adani

புதுடில்லி: அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சி கண்டதால், அவரது சொத்து மதிப்பு குறைந்து, ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். தற்போது பட்டியலில் அம்பானியை விட பின் தங்கியுள்ளார்.

அதானியின் 2-ம் இடத்தை 'நொங்பூ ஸ்பிரிங்' எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதாக வெளியான செய்தியே அதானியின் சொத்து மதிப்பு சரிய காரணம் ஆகும்.


latest tamil news


இவ்வார தொடக்கத்தில் 7,700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் நிகர சொத்து மதிப்பு, கடந்த சில நாட்களில் 6,300 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். பங்குசந்தைகளின் இன்றைய வர்த்தகத்தின் போது அதானி நிறுவனங்கள் மேலும் ஆட்டம் காணக்கூடும் என்கின்றனர்.

பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு முன்னர் அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தில் இருந்தன. ஏப்ரல் 2021-ல் அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட ஆசியாவின் 3-வது குழும நிறுவனமாக மாறியது. தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
22-ஜூன்-202113:15:27 IST Report Abuse
konanki நாம் தமிழர் தமிழகத்தில் இருந்து கொண்டு ஓங்கோலிய குடும்பத்திற்கு சொம்பு தூக்கி பதவியும் குடுத்தது பரவாயில்லையா?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
18-ஜூன்-202117:41:05 IST Report Abuse
Raman ஒரு பிரச்சனையும் இல்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202117:12:45 IST Report Abuse
Vena Suna உனக்கு 900 கோடி தான் நஷ்டம்...எனக்கு இன்னும் 6 மாசம் சம்பளம் வரலை...7 மாசமா வேலை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X