பொது செய்தி

இந்தியா

ஏரி, குளங்கள் பராமரிக்க மாவட்ட குழுக்கள் அமைக்க வேண்டும்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-ஏரி, குளங்கள் பராமரிக்க மாவட்ட குழுக்கள் அமைக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏரி குளங்கள் பராமரிப்பு தொடர்பாக, 2012 ஏப்.,லில் கர்நாடக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் ஒருவர், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு விசாரணைக்கு பின், உயர்நீதிமன்றம் அளித்த

பெங்களூரு-ஏரி, குளங்கள் பராமரிக்க மாவட்ட குழுக்கள் அமைக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏரி குளங்கள் பராமரிப்பு தொடர்பாக, 2012 ஏப்.,லில் கர்நாடக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் ஒருவர், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு விசாரணைக்கு பின், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:ஏரி, குளங்களை பராமரிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இந்த குழுவில் கிராம பஞ்சாயத்து செயலர்கள், வனத்துறை முதன்மை அதிகாரிகள், நீர்பாசனத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் குழுவை வழிநடத்த வேண்டும். மாவட்ட நிர்வாக செயலர், குழுவின் செயலராக இருக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X