பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' கமிட்டிக்கு தேவை நடுநிலையாளர்கள்; கல்வியாளர்கள் கருத்து

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை: 'நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் கமிட்டியில் நடுநிலையாளர்கள் இடம்பெற வேண்டும்' என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.'நீட்' நுழைவு தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க நிர்வாகி டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் கல்வியாளர் ஜவஹர்
NEET, Neutral, TN, நீட், நடுநிலையாளர்கள், தேவை, கல்வியாளர்கள்

சென்னை: 'நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் கமிட்டியில் நடுநிலையாளர்கள் இடம்பெற வேண்டும்' என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'நீட்' நுழைவு தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க நிர்வாகி டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் கல்வியாளர் ஜவஹர் நேசன் ஆகியோரும் அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.அரசு அதிகாரிகள் தவிர உறுப்பினர்களான இரண்டு பேரும் 'நீட்' தேர்வு எதிர்ப்பாளர்களாக உள்ளதால் நடுநிலையாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியதாவது: மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இது வினோதமான நிலைப்பாடு. தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்தால் நாட்டில் எத்தனை நுழைவு தேர்வு நடத்தினாலும் முன்னிலை பெறுவர். எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கற்பித்தல் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு கமிட்டி அமைக்க வேண்டும். மாறாக நீட் தேர்வு பாதிப்பு என்று கூறுவதற்கு கமிட்டி அமைத்திருப்பது கண் துடைப்பானது.


latest tamil news
தேவையற்றது


கமிட்டியின் முதல் கூட்டத்தின் போதே கமிட்டியின் தலைவர் 'நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது' என கூறியுள்ளார். அரசின் கொள்கையும் அப்படித் தான் இருக்கிறது. கமிட்டியில் நீட் எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசின் செயலர்கள் மட்டுமே உள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு பதில் நடுநிலையான மாணவர் நலன் பேணும் கல்வியாளர்கள் இடம் பெற வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. கமிட்டியின் தீர்வால் அதில் ஒன்றும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


கமிட்டி என்ன செய்யும்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது:தனியார் பள்ளிகளின் மாணவர்களை பொறுத்தவரை கடினமாக பயிற்சி மேற்கொண்டு 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். நீட் தேர்வு வந்த பின் அதிக மதிப்பெண் எடுக்கும் ஏழை மாணவன் கூட எந்தவித நன்கொடையும் இன்றி மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


latest tamil news


நீட் தேர்வு விவகாரத்தில் திசை திருப்பும் முயற்சியாகவே கமிட்டி அமைக்கப்பட்டதாக நினைக்கிறோம். உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பளித்த பின் கமிட்டி என்ன செய்ய முடியும்?மேலும் அரசு அமைத்துள்ள கமிட்டியில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் துணை வேந்தர்கள் மற்றும் நீட் குறித்த புரிதல் உள்ள நடுநிலையான கல்வியாளர்கள் இடம் பெற வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு


'நீட்' தேர்வு குறித்து பொது மக்கள் தங்களின் கருத்துகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் உயர்நிலை குழு மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீட் தேர்வு வாயிலாக மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தபால் மற்றும் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் சமர்ப்பிக்கலாம். பொது மக்கள் தங்களது கருத்துகளை வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஜூன்-202116:33:48 IST Report Abuse
M  Ramachandran Sugumar - Hosur,இந்தியா உங்கள் கருது நிச்சயம் மற்ற பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குரலாக கொள்ளலாம். இந்த நடிகர் சூர்யா ஏன் இந்த குதி குதிக்கிர்றார் என்று தெரிய வில்லை. அவருக்கு அவர் அறக்கட்டளைக்கு ஏதேனும் தீங்க்கு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது நீட் எதிர்ப்பு அரசியலுக்கு ஆதி பனிடந்த்து விட்டாரா? தெரிய வில்லை. நோக்கமில்லாமல் இந்த திடீர் சந்தர்ப்ப வாதி அரசியல் வாதிகள் என்னமோ மக்கள் இவர்களுக்கு நீட் பற்றி பேச உரிமைகொடுத்ததாக எண்ணம் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை நாசமாக முனைகிறார்கள். இவர்களுக்கு உண்மையிலேயே நல்ல எண்ணம் மாணவர்களுக்கு மேஅல் இருந்தால் அவர்களுடன் அளவளாவி ( மிரட்டல் தொனியில் இல்லாமல் ) அவர்கள் எண்ணத்தை அறிய வேண்டும். வேறு மாநில மாணவர்களுக்கு மட்டும் எப்படி நீட் தேயாவை யாகிறது தமிழகத்தில் மட்டும் ஏன் இந்து அரசியல் வாதிகளுக்கு தேவையிலாய். இவர்களுக்கு என்று சொந்த அஜண்ட உள்ளதா? இஙகு சென்னையில் ஒரு மாணவன் எனக்கு மட்டும் இந்த நீட் இல்லையேல் எம் பி பி எஸ் இடம் கிடைத்திருக்காது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறான்.இப்போ இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
Rate this:
Cancel
venkataraman vs - madurai,இந்தியா
19-ஜூன்-202110:37:10 IST Report Abuse
venkataraman vs நீட் அவசியம் தேவை. கமிட்டியில் கண்டவர்களையும் போடாமல், உண்மையான கல்வியாளர்களையும், தொலை நோக்கு சிந்தனை கொண்டவர்களையும் போட வேண்டும். நேற்று வரை சாராயம் விற்றவர்களையும், புள்ளி விவரக் கணக்காளர்களையும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, டாக்டர் ரவீந்திரநாத் போன்றவர்களையும் பாடல் கூடாது. இவர்களெல்லாம் இதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202100:03:59 IST Report Abuse
iconoclast இந்த education lobby ல எத்தனை வியாபாரம் இருக்கு..எவ்வளவு பணம் புழங்குது.. ஒவ்வரு பெற்றோர்களும் தன் மருத்துவராக கனவு காண்கின்றனர். இவர்கள் இன்ஜினியரிங் படிப்புக்கும் நீட் வைக்கட்டுமே? அதை செய்ய மாட்டார்கள். ராஜஸ்தான் கோட்டாவில் இதற்கென்றே பல பயிற்சி மையங்கள் 🤦‍♂️🤦‍♂️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X