கூட்டத்திற்கு திமுக வராததால் கம்யூ.களை வளைத்து விட்டீர்களா... | Dinamalar

கூட்டத்திற்கு திமுக வராததால் கம்யூ.களை வளைத்து விட்டீர்களா...

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (17)
Share
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கம்யூ., கட்சிகளுடன் இணைந்து, வரும் 28 - 30 வரை தமிழகம் முழுதும் எதிர்ப்பு இயக்கம் நடத்த உள்ளோம்.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'போராட்டத்திற்கு தி.மு.க., வராததால், கம்யூ.,க்களை வளைத்து விட்டீர்களா அல்லது கூட்டம் சேர்ப்பதற்காக அவர்களை சேர்த்துள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி
திருமாவளவன்,  ராம சீனிவாசன், எச்.ராஜா, சூர்யா, பீட்டர் அல்போன்ஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கம்யூ., கட்சிகளுடன் இணைந்து, வரும் 28 - 30 வரை தமிழகம் முழுதும் எதிர்ப்பு இயக்கம் நடத்த உள்ளோம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'போராட்டத்திற்கு தி.மு.க., வராததால், கம்யூ.,க்களை வளைத்து விட்டீர்களா அல்லது கூட்டம் சேர்ப்பதற்காக அவர்களை சேர்த்துள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.இந்திய வரலாற்றில் முதல் முறையாக, 220 ஆண்டுகளுக்கு முன், ஒரு தமிழர், ஒட்டு மொத்த பாரத தேசத்திற்கும் சுதந்திர பிரகடனம் செய்தனர். அவர்கள் தான் மருது சகோதரர். இது போன்ற தேச பக்தி செய்திகள், திராவிட குஞ்சுகளுக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை.
- தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன்


'இவர்களுக்கு தெரிந்தது எல்லாம், 'பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள், பல்லிகள் நடுவினிலே என்பது தான்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன் அறிக்கை.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 'பில்லிங்' என்பதை மாதம் ஒரு முறை என மாற்ற இதுவே சரியான தருணம்.
- பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா


latest tamil news
'தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை, தேர்தல் வெற்றிக்கு மட்டும் தான். ஆட்சிக்கு வேறு கொள்கைகள் உள்ளன என பதிலளிக்காமல் இருந்தால் சரி தான்...' என கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேச்சு.உ.பி.,யில் முஸ்லிம் முதியவரை அடித்து துன்புறுத்திய கும்பல் குறித்து, மத துவேஷம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது, அந்த மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை அறியாமல், நம்ம ஊர், 'டிவி'களும் அப்படி வெளியிட்டுள்ளன. 'டிவி'களின் செயல் கண்டனத்திற்குரியது.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சூர்யா


'எல்லா 'டிவி'களிலும் கத்துக்குட்டிகள் அதிகம். அவர்களிலும், கழக ஆதரவாளர்கள் அதிகம். எங்கே, ஹிந்துக்களுக்கு எதிரான செய்தி கிடைக்கும் என காத்திருக்கின்றனர். கிடைத்த உடன் ஆராயாமல் வெளியிட்டு விடுகின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சூர்யா பேட்டி.பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், சிமென்ட், இரும்பு விலைகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. அதைப் பார்த்து ஆனந்தமடைகிறது மத்திய அரசு.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'ஆனந்தத்தை அருகில் இருந்து ரசித்தது போல அறிக்கை விட்டுள்ளீர்களே...' என, சாடத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X