மணிப்பூரில் 43 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இம்பால்: மணிப்பூர் மாநிலம், இம்பாலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 18 மணி நேரம் நடத்திய சோதனையில், 43 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ரகசிய தகவல் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த
Goldbiscuits, Manipur, Gold Biscuits, மணிப்பூர், தங்க பிஸ்கட்கள்

இம்பால்: மணிப்பூர் மாநிலம், இம்பாலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 18 மணி நேரம் நடத்திய சோதனையில், 43 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ரகசிய தகவல் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த காரில் தீவிரமாக, 18 மணி நேரம் சோதனை நடத்தியதில், 3 இடங்களில் 43 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதற்கு ஏதுவாக, அந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. கடந்த காலங்களிலும், இந்த கார் மூலம் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்களின் மதிப்பு ரூ.21 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news


மணிப்பூரில் மியான்மர் எல்லயை ஒட்டிய பகுதிகளில் தங்க கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் கடத்தல் அதிகரித்து உள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும், ரூ.33 கோடி மதிப்புள்ள 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சோதனையில் ஒரே நாளில் 55 கிலோ தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202121:45:01 IST Report Abuse
Nagarajan D கடத்தல் காரர்களை சுட்டுதள்ளுங்கள்... மற்றவனுங்களுக்கு பயம் வரும் அதை விட்டு முன் ஜாமீன், இடைக்கால தடை பின் ஜாமீன் என கோர்ட்டுகள் கொடுக்கக்கூடாது...
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
18-ஜூன்-202112:31:30 IST Report Abuse
Ramasamy சாப்பிடற பிஸ்கட்டுக்கே நிறைய பேருக்கு வழியைக் காணோம்...இவர்கள் தங்க பிஸ்கட்ல வாழறாங்க.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
18-ஜூன்-202110:59:14 IST Report Abuse
Vivekanandan Mahalingam பிடித்தது அறுபது ஏழு கிலோ, மற்றும் அம்பத்தைந்து கிலோ பிடிக்காதது எவ்வளவோ ? என்ன நடக்கிறது புரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X