பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 88 ஆயிரம் பேர் நலம்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, கடந்த 73 நாட்களுக்கு பின்னர் 8 லட்சத்திற்கு கீழ் சென்றது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 62,480 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,62,793 ஆனது. மேலும், 88,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால்,
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, கடந்த 73 நாட்களுக்கு பின்னர் 8 லட்சத்திற்கு கீழ் சென்றது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 62,480 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,62,793 ஆனது. மேலும், 88,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,85,80,647 ஆனது. கடந்த 36 நாட்களாக, தொற்றில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 73 நாட்களுக்கு பின்னர், சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கு கீழ் சென்றது. தற்போது 7,98,656 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 1,587 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை 3,83,490 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது, கோவிட்டில் இருந்து மீள்பவர்கள் விகிதம் - 95.93 சதவீதமாகவும்,இறப்பு விகிதம் - 1.29 சதவீதமாகவும் உள்ளது.


தடுப்பூசி

இந்தியாவில் தற்போது வரை, 26,89,60,399 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 32.59 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.


பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,29,476 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 38,71,67,696 ஆக அதிகரித்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X