பப்ஜி மதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
தர்மபுரி: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய புகாரில், யூடியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.'யு டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் நேரலையாக
Madhan, Toxic Madhan, Arrested, PUBG, மதன், கைது, டாக்சிக், பப்ஜி

தர்மபுரி: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய புகாரில், யூடியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

'யு டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பி, சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். கோடிக் கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்றும், யூடியூபர் பப்ஜி மதன் மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது.


latest tamil newsஇது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் மட்டும் இதுவரைக்கும், 120க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், மதனை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே அவரது மனைவி கிருத்திகா அந்த யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்தது மட்டுமல்லாமல், மதனுடன் சேர்ந்து வேறு பெயரில் ஆபாச உரையாடல் நடத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsதலைமறைவாக இருந்த மதன் குறித்து கிருத்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தர்மபுரியில் பதுங்கி இருந்த மதன போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் விரைவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதற்கிடையே சென்னை கொண்டுவரப்பட்ட பப்ஜி மதன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202103:19:17 IST Report Abuse
Naz Malick பேசாம இவனை மாதிரி கிருமிகளை Encounter பண்ணி விடுவது போலீசுக்கும் நல்லது சமூகத்திற்கும் நல்லது
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
18-ஜூன்-202121:11:56 IST Report Abuse
Karthik I am not sure under which section case will be filed. Actually, case should be filed against YouTube for not blocking contents that are not sui for kids or even adults. Information Technology law may be enforced for using or promoting a product (PUBG) that is banned in India. Enforcement Directorate may file a case if income tax is not filed or income not shown. ED can file a case for investing money in Bit Coins since it is banned in India. Filing case for using filthy language does not stand in court. It is just media diverting main issues in TN such as Covid, Temple land, some new ordinance passed against Hindus, etc.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-ஜூன்-202120:37:34 IST Report Abuse
J.Isaac பொள்ளாச்சி பாலியல், அருப்புக்கோட்டை நிர்மலாதேவி, கன்னியாகுமரி சீனி வழக்குகள் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அந்த தைரியம் தான் இவனுக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X