பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (18.6.2021 - 24.6.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சுக்கிரன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.அசுவினி: மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுறுசுறுப்பாகப் பணியாற்றி
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,  கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (18.6.2021 - 24.6.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சுக்கிரன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
அசுவினி: மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுறுசுறுப்பாகப் பணியாற்றி வெற்றி காண்பீர்கள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
பரணி: உடன்பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுபச்செலவுகள் செய்ய நேரிடும். பணியாளர்களுக்கு அலைச்சல் கூடும். நண்பரால் சிறு நன்மை ஏற்படும். பொதுநல சேவை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கார்த்திகை 1: பொறுப்புகள் அதிகரிக்கும். பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படலாம். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வம்புப் பேச்சு வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 22.6.2021 காலை 6:58 - 24.6.2021 காலை 9:20 மணி


ரிஷபம்


latest tamil news



புதன், சுக்கிரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: உங்களுக்கு நன்மை செய்பவர்களுடன் நெருக்கமாவீர்கள். சகோதரர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகும். அது ஓரிரு நாளில் சரியாகும். பணம் கையாளும் பணியாளர்களுக்கு கவனம் தேவை
ரோகிணி: பலகாலத் தேவைகள் பூர்த்தியாகும். நன்கு உழைத்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கடுமையான பேச்சினால் உறவினரிடையே மனவருத்தம் ஏற்படாதபடி கவனமாக இருங்கள்.
மிருகசீரிடம் 1,2: காதல் கனிந்து திருமண ஏற்பாடு நடக்கும். யுக்திகளால் எதிரிகளை வெல்வீர்கள். பணியாளர்களின் போட்டிகள் விலகும். பலகாலம் தடைப்பட்ட விஷயங்களை செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம்: 24.6.2021 காலை 9:21 மணி - நாள் முழுவதும்


மிதுனம்


ராகு, கேது, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: நற்பெயர் வாங்குவீர்கள். முன்னேற்றம் பற்றிய புதிய சிந்தனை வரும். மாற்றுக் கருத்தால் மனநிம்மதி குறைய அனுமதிக்க வேண்டாம். பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை: கடந்த வாரம் பயந்து கொண்டிருந்த ஆரோக்யம் பற்றிய நிலைமை சீரடையும். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொண்டு பாராட்டுவர். மன நிறைவு தரும் வாரம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: சகஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோருக்கு நற்செய்தி உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தாய்வழி உறவினரிடம் இருந்த பிரச்னை தீரும்.


கடகம்


புதன், ராகு, சந்திரன் அனுகூல பலனை தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
புனர்பூசம் 4: பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகள் நீங்கும். உங்களின் செயல்களுக்கு ஒருவர் பக்கபலமாக செயல்படுவார். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகிச் சரியாகும்.
பூசம்: மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
ஆயில்யம்: இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி சற்றுத் தாமதமாகும். புதியதாக வீடு, மனை, வாகன சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மன நிம்மதியும், அதிக நன்மையும் உண்டாகும்.


சிம்மம்


சுக்கிரன், புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
மகம்: தேவையற்ற விஷயங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம். முயற்சி காரணமாக வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டி வரும். புதிய விஷயம் ஒன்றைக் கற்பீர்கள்.
பூரம்: பணியாளர்களுக்கு மேலதிகாரியின் கருணைப் பார்வையால் பலன் கிட்டும். கோபத்தை வென்று நிம்மதி காண்பீர்கள். பெண்களுக்கு நவீனப் பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: வெளிநாட்டு விவகாரங்களில் சிறு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் நற்பெயர் எடுக்கப் புதிய வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு சரியான சமயத்தில் உதவி செய்து நெகிழ வைப்பீர்கள்.


கன்னி


செவ்வாய், சுக்கிரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
உத்திரம் 2,3,4: மிகுந்த முயற்சியின்பேரில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். பெண்களுக்கு உடன்பிறந்தவர்கள் உதவுவர். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
அஸ்தம்: அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பிறரது குடும்ப பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை.

சித்திரை 1,2: புதியவர்களுக்கு நன்மை செய்து நற்பெயர் எடுப்பீர்கள். பிரிந்திருந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பீர்கள். பணியாளர்கள் பிறரது செயல்களில் தலையிடவேண்டாம். எதிர்பாலினத்தினரால் நன்மை உண்டாகலாம்.


துலாம்


குரு, புதன், சுக்கிரன் கூடுதல் நற்பலன்களை தருவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
சித்திரை 3,4: விருந்தில் பங்கேற்கும் திட்டம் நிறைவேறாமல் போகலாம். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. கோபத்தை வெல்வீர்கள். எதிலும் ஒரு நிதானப்போக்கு இருப்பதால் சலிப்படைவீர்கள்.
சுவாதி: தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு மனஉளைச்சல் அதிகமாகும். புதிய பொருட்கள் வாங்குவதற்குச் செலவு செய்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் பிரச்னைகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் சிரமங்கள் தீரும். நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும்.


விருச்சிகம்


சுக்கிரன், சந்திரன், புதன் நற்பலனைத் தருவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
விசாகம் 4: ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். வியாபரிகளுக்கு புதிய ஆர்டர் பற்றி இருந்த டென்ஷன் தீரும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
அனுஷம்: மூத்த சகோதர, சகோதரியிடம் இருந்து உதவிகள் பெறுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். பணியிடத் தலைமையின் ஆதரவுக் கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.
கேட்டை: வேலைப்பளு அதிகரித்தாலும் லாபம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். பணியிட சிக்கல்கள் தீர்ந்து நிம்மதியைத் தரும். திட்டமிட்ட விஷயங்கள் தள்ளிப்போனாலும் பொறுமையாக இருங்கள்.


தனுசு


சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். சாஸ்தா வழிபாடு நன்மை தரும்.
மூலம்: கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். எந்தச் செயல்பாட்டிலும் அவசரம் காட்ட வேண்டாம். யாரிடமும் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டை மாற்றும் முயற்சியில் தாமதம் ஏற்படலாம்.
பூராடம்: வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினரால் சிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். பெண்களுக்கு சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
உத்திராடம் 1: அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் சாதிப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்ப விவகாரங்களைப் பெண்கள் சிறப்பாக நிர்வகிப்பார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


மகரம்


புதன், சூரியன், சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
உத்திராடம் 2,3,4: சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். மன உளைச்சல் தீர்ந்து மனம் நிம்மதியடையும். பிள்ளைகளுக்கு வருத்தம் தோன்றாதபடி மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.
திருவோணம்: பெண்களுக்கு உறவினரால் அனுகூலம் உண்டு. அரசியல் தலைவர்களை சந்தித்து நன்மை காண்பீர்கள். பணியிடத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். எதிரிகளாக இருந்தவர்களை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஈடுபாட்டுடன் உழைத்து நற்பலன் அடைவீர்கள். மனதுக்கு நெருக்கமானவருடன் சிறு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முயற்சியில் வெற்றி காண புதிய யுக்திகளை கற்பீர்கள்.


கும்பம்


புதன், சூரியன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். மீனாட்சி வழிபாடு நன்மை தரும்.
அவிட்டம் 3,4: முயற்சிகளின் காரணமாகக் களைப்பு வேண்டாம். அலைச்சல் ஏற்பட்டாலும் நற்பலன் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டு. குடும்பத்தினருக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
சதயம்: உங்களின் முயற்சிக்கு உயரதிகாரிகள் வெற்றியை தேடித்தருவர். மாணவர்களுக்குப் பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். வியாபாரிகளுக்கு எதிரிகள் விலகுவர். யாருக்காகவும் கையெழுத்திட வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: உடன்பிறந்தோருக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பற்றாக்குறை அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குறுக்கு வழியை நாட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 18.6.2021 காலை 6:00 - 20.6.2021 அதிகாலை 4:24 மணி


மீனம்


ராகு, சுக்கிரன், புதன், சனி அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
பூரட்டாதி 4: சகோதர, சகோதரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
உத்திரட்டாதி: ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சேமிப்பை அதிகரிப்பீர்கள். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சையின் மூலம் நிவாரணம் அடைவீர்கள்.
ரேவதி: சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்களால் தொல்லை ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வரவை விட செலவு கூடும்.
சந்திராஷ்டமம்: 20.6.2021 அதிகாலை 4:25 - 22.6.2021 காலை 6:57 மணி

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X