பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்கள் திறப்பு எப்போது: அமைச்சர் பதில்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
மதுரை:'' தமிழகத்தில், கோவிட் தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்'' என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது கோவில் யானை பார்வதியின்

மதுரை:'' தமிழகத்தில், கோவிட் தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்'' என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.



latest tamil news




மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது கோவில் யானை பார்வதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


latest tamil news



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். தமிழகத்தில், கோவிட் தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேகமாக பாதிப்பு குறைந்து வருகிறது.


latest tamil news



கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடந்து வருகிறது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்ற காரணத்தினால், கோயில் நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது. தீவிபத்தினால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202106:21:14 IST Report Abuse
மனுநீதி TASMAC வரிசையில் இவர்கள் இலவசமும், தண்டமும் கொடுத்து கொள்ளை அடிக்கக்கோவில்கள்.
Rate this:
Cancel
19-ஜூன்-202106:21:14 IST Report Abuse
மனுநீதி TASMAC வரிசையில் இவர்கள் இலவசமும், தண்டமும் கொடுத்து கொள்ளை அடிக்கக்கோவில்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-202105:32:50 IST Report Abuse
g.s,rajan கோயில்களை சீக்கிரம் திறக்க அரசாங்கம் உத்தரவு இடவேண்டும் .மக்கள் பல் வேறு குழப்பத்தில் ,இனம் புரியாத பீதியில் பதட்டத்தில் இருக்கின்றனர். மனநிம்மதி இல்லாமல் உறக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர் ,நிதி நெருக்கடி ,வேலை இழப்பு .தொழில் நசிவு காரணமாக பல மக்கள் செய்வது அறியாது பித்துப் பிடித்தது போல் இருக்கின்றனர் இன்னும் சிறிது நாட்களில் துணியைக் கிழிச்சுக்கிட்டு தெருவுல ஓடும் அபாயகரமான சூழல் வந்துவிடும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X