திறமைமிக்க தலைவர்கள்: முதலிடம் பிடித்த பிரதமர் மோடி| Dinamalar

திறமைமிக்க தலைவர்கள்: முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (58) | |
புதுடில்லி: உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், 66 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
PM Modi, Global Approval Rating, 66 Percent, Beats, Joe Biden, Angela Merkel, பிரதமர் மோடி, திறமை, பட்டியல், முதலிடம்

புதுடில்லி: உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், 66 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். கோவிட் தொற்று காலத்தில் இவரது செல்வாக்கு சற்று சரிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்தையும் பிடித்தனர்.


latest tamil news4 முதல் 10 இடங்கள் முறையே, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (54%), ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (53%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (53%), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (48%), பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (44%), தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் (37%), ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் (36%) ஆகியோர் உள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X