வளமான அரசை கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல் டுவிட்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு
Stalin, Meets, Rahul, ராகுல், ஸ்டாலின், சந்திப்பு, டுவிட்

புதுடில்லி: தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை அளித்ததாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும், காங்., எம்பி., ராகுலை நேரில் சந்தித்து பேசினார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.


latest tamil news


சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, ‛தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம்,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202123:45:44 IST Report Abuse
ஆப்பு உங்க பங்களிப்பே வாணாம். ரொம்ப பேசினா தளபதி இருக்குறதையும்.கட் பண்ணிடுவாரு.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
18-ஜூன்-202123:15:59 IST Report Abuse
Mohan நீங்க எல்லாம் கட்டமைக்கிறதுக்குள்ளே நாங்க எல்லாம் கட்டைல பூடுவோம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
18-ஜூன்-202122:48:14 IST Report Abuse
Tamilnesan அஸ்திவாரமே இல்லாம பப்பு எதை கட்டமைக்க போகிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X