பொது செய்தி

தமிழ்நாடு

'மாரடோரியம்' வழங்காத தனியார் வங்கிகள் நஷ்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
மதுரை : சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஒத்திவைப்பும் (மாரடோரியம்), கடன் சீரமைப்பு வழங்கியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் சில தனியார் வங்கிகள் இதை கடைப்பிடிக்கவில்லை.இதுகுறித்து இலகு உத்யோக் பாரதி மதுரை கிளைத் தலைவர் ஞானசம்பந்தன் கூறியதாவது: மே 5 ம் தேதி ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை படி அனைத்து வர்த்தக வங்கிகளையும் சிறு, குறுந்தொழில்களுக்கு தேவையான



மதுரை : சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஒத்திவைப்பும் (மாரடோரியம்), கடன் சீரமைப்பு வழங்கியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் சில தனியார் வங்கிகள் இதை கடைப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து இலகு உத்யோக் பாரதி மதுரை கிளைத் தலைவர் ஞானசம்பந்தன் கூறியதாவது:
மே 5 ம் தேதி ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை படி அனைத்து வர்த்தக வங்கிகளையும் சிறு, குறுந்தொழில்களுக்கு தேவையான கூடுதல் நடைமுறை மூலதனத்தை கடனாக அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதையும் செப்., 30க்குள் கட்டாயமாக அளிக்க வேண்டுமெனவும் இதுகுறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பாலான வங்கி மேலாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை பற்றிய விவரம் தெரியவில்லை. முதல் அலையின் போது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீளாத நிலையில் 2வது அலையாலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. கடும்நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு இந்த சூழ்நிலையில் வங்கிகள் உதவ வேண்டியது கடமை.

அதே நேரத்தில் தனிநபர் கடனுக்கு மாரடோரியம் அறிவித்திருக்கும் ரிசர்வ் வங்கி சிறு, குறுந்தொழில்களுக்கு அந்த வசதியை நீட்டிக்கவில்லை. தொழில் துறைக்கும் மாரடோரியம் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X