ஒரே நாளில் 6.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி பீஹார் சாதனை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் கடந்த ஜூன் 16ல் (புதன்கிழமை) மட்டும் 6.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒரேநாளில் எந்த மாநிலமும் 6 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தியது இல்லை.கோவிட் 2வது அலை தீவிரத்தின் காரணமாக நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 26.89 கோடி ‛டோஸ்' தடுப்பூசிகள்
Bihar, Highest, SingleDay, Vaccination, 6.62 Lakh Doses, பீஹார், கொரோனா, கோவிட், தடுப்பூசி

பாட்னா: பீஹாரில் கடந்த ஜூன் 16ல் (புதன்கிழமை) மட்டும் 6.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒரேநாளில் எந்த மாநிலமும் 6 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தியது இல்லை.

கோவிட் 2வது அலை தீவிரத்தின் காரணமாக நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 26.89 கோடி ‛டோஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே ஒரேநாளில் அதிகளவு தடுப்பூசிகள் செலுத்திய மாநிலம் என்ற சாதனையை பீஹார் பெற்றுள்ளது. அங்கு நேற்று முன்தினம் (ஜூன் 16) மட்டும், 6,62,507 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், கோவின் இணையதளத்தில் 5.03 லட்சம் டோஸ் தடுப்பூசிகளே போடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதற்கு காரணம், தடுப்பூசிகள் செலுத்திய விவரங்களை இணையத்தில் பதிவிடுவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், இதனால் நேற்றைய தடுப்பூசிகள் கணக்கில் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் பீஹாரில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தின் தரவுகளின்படி, ஜூன் 16ல் பீஹாருக்கு அடுத்தப்படியாக, உத்தரபிரதேசத்தில் 3.64 லட்சம் தடுப்பூசிகள், மத்தியப் பிரதேசத்தில் 3.38 லட்சம் தடுப்பூசிகள், தமிழகத்தில் 3.35 லட்சம் தடுப்பூசிகள், மஹாராஷ்டிராவில் 2.34 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
18-ஜூன்-202116:12:57 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தமிழகத்தில் நேற்று வெறும் 80000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. போக போக பீகார் பழைய தமிழகம் மாதிரி ஆயிரும். ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் பழைய பீகார் மாதிரி ஆயிரும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
18-ஜூன்-202115:24:17 IST Report Abuse
 N.Purushothaman பீஹார் மக்களிடம் ஏற்பட்டு உள்ள ஒரு விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்படாததற்கு காரணம் தடுப்பு ஊசியில் எதிர் மறை பிரச்சாரங்களை விடியல் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்படுத்திய தாக்கமே ...இப்போல்லாம் பல வட மாநிலங்களில் எந்த ஒரு விஷயத்திலும் முதிர்ச்சியான அணுகுமுறை வெளிப்படுவது வரவேற்கத்தக்க விஷயம் ....ஆனால் தமிழகமோ முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்மறை கருத்துக்களால் சீரழிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X